search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pimples"

    முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும்.
    சமையலில் இடம்பிடிக்கும் முருங்கை இலை, சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும். முருங்கை இலை எண்ணெய்யும் முகப்பருக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது. சரும வறட்சி, சரும சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை எண்ணெய், முருங்கை பவுடர் நிவாரணம் தரும்.

    முருங்கை பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் சரும சுருக்கங்கள் மறைய தொடங்கும். கரும்புள்ளிகள் இருந்தாலும் அவையும் நீங்கிவிடும். உதடுகளில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் முருங்கை எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம்.

    சரும பொலிவை மேம்படுத்தவும் முருங்கை இலைகளை பயன்படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து முகத்தில் பூசி வந்தால் முக அழகு கூடும். சருமத்தில் ஏற்படும் நிற மாற்றமும் மறையதொடங்கும். முருங்கை இலை பேஸ்டை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்.

    முதலில் முருங்கை இலைகளை வெயிலில் உலர்த்தி பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன், பன்னீர் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகத்தில் பூசி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் காட்டன் துணியால் முகத்தை துடைத்துவிட்டு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும். 
    உங்கள் முகத்தில் உள்ள முகப்பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    முகத்தில் முகப்பரு வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான முகப்பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு அந்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து பின் முடிவெடுங்கள்.

    முகப்பருவில் உள்ள சீழ் உடன் பாக்டீரியாக்களும் சேர்ந்து இருப்பதால், அதை கையால் கிள்ளும் போது, இதுவரை மேற்பரப்பில் பாதிக்கப்பட்டிருந்த சருமத் துளைகள் ஆழமாக பாதிக்கப்படும். இதனால் கிள்ளிய அந்த முகப்பரு மிகவும் தீவிரமாகக் கூடும்.

    முகப்பருவை கிள்ளும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் கலந்த சீழ் வடிகட்டப்பட்டு வெளி வருவதால், அந்த முகப்பருவை சுற்றிய பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக ஆரோக்கியமான சருமத் துளைகளும் பாதிப்பிற்குள்ளாகும் வாயப்புள்ளது.

    அசுத்தமான கையால் முகப்பருவை தொடும் போது, முகப்பருவில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் முகம் முழுவதும் முகப்பரு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

    முகப்பருவை கிள்ளும் போது, அதைச் சுற்றிய பகுதி கடுமையாக பாதிக்கப்படுவதால், அந்த முகப்பரு மறையும் போது நீங்கா தழும்புகளை விட்டு செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

    முகத்தில் முகப்பருவை வந்தால், கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க பழகுங்கள். முகப்பருவை தொடாமல் இருந்தாலே, 3-5 நாட்களில் அது தானாக போய்விடும்.
    பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
    மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக முகப்பரு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கும், பொடுகு பிரச்சனை உள்ளவர்களுக்கும் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொடுகு மூலம் வரும் பருக்கள் நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் பொறிப்பொறியாக வரும்.

    எனவே முதலில் எந்தக் காரணத்தினால் தனக்கு பரு வருகிறது என்பதைக் கண்டுபிடித்தல் மிகவும் முக்கியம். பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனை அல்லது அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனையோடு துவக்கத்திலே செய்யத் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

    * விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.

    * பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.

    * பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்றுக்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம் முகத்தில் நிர‌ந்தரமாகிவிடும்.

    * பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போடுதல் கூடாது.

    முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில் இதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.
    ×