என் மலர்

  நீங்கள் தேடியது "Peikulam Bazaar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுகாதாரம் இல்லாமலும் , தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாகவும் பேய்க்குளம் பஜாரில் உள்ள 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
  • சில கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

  சாத்தான்குளம்:

  பேய்க்குளத்தில் கடைகள் உரிமம் இல்லாமலும், சுகாதாரம் இல்லாமலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யபடுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

  இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் உத்தரவின் பேரில் பேய்க்குளம் பஜாரில் உள்ள கடைகளில் ஆழ்வார் திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், சோம சுந்தரம், ஜேசுராஜ், தியாக ராஜன், சுப்பிரமணியன், ஞானராஜ், யோவான் குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

  அப்போது சில கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். உரிமம் இல்லாத மற்றும் சுகாதாரம் பேணாத 15 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

  ×