search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passenger Complaint"

    • நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புறப்பட்டு காயாமொழி, தளவாய்புரம் வழியாக திருச்செந்தூர் வரை தடம் எண் 106 ஏ மற்றும் 106 டி என்ற 2 அரசு பஸ்களும் சென்று வருகிறது.
    • இந்த 2 பஸ்களும் திடீரென இந்த வழித்தடத்தை ரத்து செய்துவிட்டு, அடிக்கடி நெல்லை அல்லது வேறு ஊருக்கு மாற்றிவிடப்படுகிறது என்று பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    உடன்குடி:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புறப்பட்டு நடுவக்குறிச்சி, தட்டார் மடம், கொ ம்மடிக் கோட்டை, மணி நகர், உடன்குடி, தைக் காவூர், தண்டுபத்து, வெள்ளாளன்விளை, சியோன்நகர், பரமன்குறிச்சி, காயாமொழி, தளவாய்புரம் வழியாக திருச்செந்தூர் வரை தடம் எண் 106 ஏ மற்றும் 106 டி என்ற 2 அரசு பஸ்களும் சென்று வருகிறது.

    ஒரு பஸ் திருச்செந்தூரில் புறப்படும் போது, அதே நேரத்தில் மற்றொரு பஸ் திசையன்விளையில் புறப்படும். இந்த இரு பஸ்களும் இயக்கப்படும் வழி நெடுக சுமார் 75-க்கு ம் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த இரு பஸ்களில் அதிகமாக பயணிகள் பயணம் செய்கின்றனர்.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாண விகள், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என இப்படி அனைத்து தரப்பு மக்களும் இந்த பஸ்களை நம்பியே உள்ளனர்.

    திசையன்விளை பணிமனையில் இருந்து இயக்கப்படும் இந்த இரு பஸ்களும் திடீரென இந்த வழித்தடத்தை ரத்து செய்துவிட்டு, அடிக்கடி நெல்லை அல்லது வேறு ஊருக்கு மாற்றிவிடப்படுகிறது என இப்பகுதி பொதுமக்கள், பயணிகள் புகார் தெரி விக்கின்றனர். இதனால் பல மணி நேரம் காத்திருக்கும் தாங்கள் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறினர். மேலும் இந்த 2 பஸ்களையும் முறைப்படி பழைய வழித்த டத்தில் முந்தைய நேரப்படி தினசரி இயக்க நடவடிக்கை வேண்டும் என்று கிராம மக்கள், பயணிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் இது சம்பந்த மாக கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு கிராம மக்கள் தனித்தனியாக கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.

    ×