search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani fever"

    பழனி பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    பழனி:

    பழனி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த வருடம் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அதிகளவு பரவி இருந்தது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது.

    சுகாதாரம், கொசு ஒழிப்பு, சாக்கடை தூர்வாருதல் போன்றவற்றால் காய்ச்சல் பரவல் குறைந்தது. கடந்த சில மாதங்களாக காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பும் குறைந்திருந்தது. தற்போது மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    பழனி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தற்போது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சாக்கடைகள் சரிவர அல்லாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் அதிகளவு உருவாகிறது. கொசு மருந்துகள் சரிவர அடிக்கப்படுவதில்லை.

    பழனி நகரின் மையப்பகுதியில் உள்ள வையாபுரிக் கண்மாயில் அமலைச் செடிகள் அழுகி கிடக்கின்றன. இதில் இருந்தும் கொசுக்கள் அதிகளவு உருவாகின்றன.

    எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து காய்ச்சல் பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    ×