search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NZvSL"

    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் நியூசிலாந்து 176 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கையும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. #NZvSL
    இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் நியூசிலாந்து திணறியது. 64 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அதிரடியாக விளையாடினார். அவர் 65 பந்தில் 68 ரன் அடித்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.

    இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 178 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்மல் 5 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.



    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியும் திணறியது. பேட்டிங்கில் ஜொலித்த டிம் சவுத்தி பந்து வீச்சிலும் அசத்தினார். குணதிலகா (8), கருணாரத்னே (7), சண்டிமல் (6) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது இலங்கை.



    மெண்டிஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது. இலங்கை முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்துள்ளது. மேத்யூஸ் 27 ரன்னுடனும், சில்வா 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    வெலிங்டனில் நடைபெற்று வந்த நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. #NZvSL
    வெலிங்டன்:

    நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது.

    இலங்கை முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்தது. தொடக்க வீரர் டாம் லதம் 264 ரன்கள் குவித்தார்.

    296 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. குசால் மெண்டிஸ் 116 ரன்னும், மேத்யூஸ் 117 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

    இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்தது. குசால் மெண்டிஸ் 141 ரன்னும், மேத்யூஸ் 120 ரன்னும் எடுத்தனர். #NZvSL
    வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணியின் மெண்டிஸ், மேத்யூஸ் ஒருநாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். #NZvSL
    வெலிங்டன்:

    நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்தது. தொடக்க வீரர் டாம் லதம் 264 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    296 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுத்து திணறிய நிலையில் இருந்தது. குஷால் மெண்டிஸ் 5 ரன்னும், மேத்யூஸ் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். குசால் மெண்டிஸும், முன்னாள் கேப்டன் மேத்யூஸும் நியூசிலாந்து பந்துவீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். குசால் மெண்டீஸ் 6-வது சதத்தையும், மேத்யூஸ் 9-வது சதத்தையும் பதிவு செய்தனர்.



    சதம் அடித்ததும் மட்டுமல்லாமல் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இன்று 90 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடி இந்த ஜோடி 239 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ் 116 ரன்னுடனும், மேத்யூஸ் 117 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள்தான் ஒருநாள் முழுவதும் நிலைத்து நின்று விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது வரை இலங்கை 37 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளை இலங்கை அணி சிறப்பாக விளையாடினால் போட்டியை டிரா செய்ய வாய்ப்புள்ளது.
    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரர் டாம் லாதம் ஆட்டமிழக்காமல் 264 ரன்கள் விளாச நியூசிலாந்து 578 ரன்கள் குவித்தது. #NZvSL
    நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவித்து இருந்தது. தொடக்க வீரர் டாம் லாதம் 121 ரன்னும், ராஸ் டெய்லர் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய டாம் லாதம் அபாரமாக விளையாடி டெஸ்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 412 பந்துகளில் 16 பவுண்டரியுடன் அவர் 200 ரன்னை எடுத்தார். இரட்டை சதம் அடித்த 16-வது நியூசிலாந்து வீரர் ஆவார்.

    ஒருபக்கம் டாம் லாதம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் விக்கெட்டுக்கள் சரிந்ததால் நியூசிலாந்து அணி 578 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. லாதம் 264 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 489 பந்துகளில் 21 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.



    இதன்மூலம் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த 6-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை லாதம் பெற்றார். மெக்கல்லம் (302 ரன்), மார்ட்டின் குரோவ் (299), ராஸ் டெய்லர் (290), ஸ்டீபன் பிளமிங் (274), பிரையன் யங் (264) ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார்.

    296 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 20 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 276 ரன்கள் தேவை என்பதால் இலங்கையின் தோல்வி உறுதியாகியுள்ளது.
    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். #NZvSL
    இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும், ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடரும் நடைபெற இருக்கிறது.

    ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான மூத்த வீரர் மலிங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1.மேத்யூஸ், 2. குணதிலகா, 3. குசால் பேரேரா, 4. சண்டிமல், 5. குணரத்னே, 6. குசால் மெண்டிஸ், 7. டி சில்வா, 8. டி பெரேரா, 9. சண்டகன், 10. சீக்குகே பிரசன்னா, 11. சமீரா, 12. ரஜிதா, 13. நுவான் பிரதீப், 14. குமாரா, 15. மலிங்கா, 16. டிக்வெல்லா.
    ×