search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேத்யூஸ்"

    • நடந்த முடிந்த உலகக் கோப்பை தொடரில் டைம் அவுட் முறையில் மேத்யூஸ் அவுட் ஆனார்.
    • அதற்கு ரிவேஞ்ச் கொடுக்கும் விதமாகதான் இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    சிலெட்:

    இலங்கை அணி 3 வடிவ கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடர் முதலில் தொடங்கியது. முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, இலங்கை வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து வெற்றி கோப்பையை இலங்கை அணி வீரர்கள் பெற்றுக் கொண்டனர். அப்போது வங்காளதேச அணியை வெறுப்பேற்றும் விதமாக அனைத்து வீரர்களும் டைம் அவுட் Celebrations கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இலங்கை வீரர்கள் அப்படி நடந்து கொள்ள இதுவே காரணம். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர். 

    எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.

    ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் மேத்யூஸ்.

    இதற்கு ரிவேஞ்ச் கொடுக்கும் விதமாகதான் இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    • இலங்கை, ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கொழும்பு,

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார்.

    இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்திருந்தது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. திமுத் கருணரத்னே 77 ரன்னும் எடுத்தனர். மேத்யூஸ், சண்டிமால் ஜோடி சிறப்பாக விளையாடி சதமடித்தனர். மேத்யூஸ் 141 ரன்னும், சண்டிமால் 107 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 410 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இலங்கை 212 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் நவீத் சத்ரன், கைஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

    • ஹெல்மெட் பிரச்சினையால் தான் உடனடியாக தன்னால் பேட்டிங் செய்ய இயலாமல் போய் விட்டது என்று மேத்யூஸ் சொன்னதை நடுவர்கள் ஏற்கவில்லை.
    • வங்காளதேச கேப்டனும் அப்பீலை வாபஸ் பெற மறுத்து விட்டார்.

    லண்டன்:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 6-ந் தேதி டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூசுக்கு வழங்கப்பட்ட வினோதமான 'அவுட்' சர்ச்சையை கிளப்பியது. சமரவிக்ரமா ஆட்டம் இழந்ததும் களம் புகுந்த மேத்யூஸ் தனது 'ஹெல்மெட்'டில் வார் அறுந்து விட்டதால் மாற்று 'ஹெல்மெட்' கொண்டு வரும்படி வெளியில் இருந்த சக வீரரை அழைத்தார்.

    இதனால் அவர் பேட் செய்ய காலதாமதமாகி விட்டதாகவும், 'டைம்டு அவுட்'டின் படி விக்கெட் வீழந்ததாக அறிவிக்கும்படியும் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் நடுவர்களிடம் முறையிட்டார். உலகக் கோப்பை போட்டி விதிமுறைப்படி ஒரு வீரர் 'அவுட்' ஆனால் அடுத்த பேட்ஸ்மேன் 2 நிமிடத்துக்குள் பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். அந்த விதியை மேத்யூஸ் மீறி விட்டதாக கூறி நடுவர்கள் அவருக்கு 'அவுட் 'வழங்கினர்.

    ஹெல்மெட் பிரச்சினையால் தான் உடனடியாக தன்னால் பேட்டிங் செய்ய இயலாமல் போய் விட்டது என்று மேத்யூஸ் சொன்னதை நடுவர்கள் ஏற்கவில்லை. வங்காளதேச கேப்டனும் அப்பீலை வாபஸ் பெற மறுத்து விட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் மேத்யூஸ் தான். மேத்யூசுக்கு அவுட் வழங்கியது சரி தான் என்று ஒரு தரப்பினரும், சரியில்லை என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கிரிக்கெட் ஆட்டத்துக்கான விதிமுறையை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) மேத்யூஸ் 'அவுட்' சர்ச்சை குறித்து நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில், 'இலங்கை வீரர் மேத்யூசுக்கு நடுவர்கள் 'டைம்டு அவுட்' வழங்கிய தீர்ப்பு சரியானதாகும்.

    ஹெல்மெட் வார் அறுந்தது குறித்து மேத்யூஸ் நடுவர்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. அது குறித்து அவர் நடுவர்களிடம் எதுவும் சொல்லாமல் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி சக வீரர்களுக்கு சைகை காட்டியிருக்கிறார். நடந்ததை நடுவர்களிடம் விளக்கி அதனை சரி செய்ய நேரம் கேட்டு இருந்தால் அவர்கள் ஹெல்மெட்டை மாற்ற அனுமதித்திருக்கக்கூடும். அத்துடன் டைம்டு அவுட்டுக்கான சாத்தியக்கூற்றில் இருந்தும் தப்பித்து இருக்கலாம்.

    பேட்டிங் செய்வதில் ஏற்பட்ட காலதாமத நேரத்தை நிறுத்தி வைக்கும்படி மேத்யூஸ் கேட்காததாலும், 2 நிமிடம் கடந்து விட்டதாக எதிரணியால் அப்பீல் செய்யப்பட்டதாலும் அவருக்கு நடுவர்கள் அவுட் வழங்கியது சரியானதாகும். நடுவர்கள் ஆட்ட விதிமுறையின்படியே நடவடிக்கை எடுத்துள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மேத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயார் ஆகவில்லை டைம்அவுட் முறையில் அவுட்.
    • ஷாகிப் அல் ஹசன் திரும்பப் பெற மறுப்பு தெரிவித்ததால், மேத்யூஸ் கடும் விமர்சனம்.

    உலகக் கோப்பை தொடரில் வங்காளதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 6-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது இலங்கை வீரர் மேத்யூஸ் பேட்டிங் செய்ய வரும்போது, குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயாராகவில்லை என நடுவர் "டைம்அவுட்" முறையில் அவுட் கொடுத்தார். இதனால் பந்தை எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்தார்.

    வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முறையீடு செய்ததால் நடுவர் அவுட் கொடுத்தார். மேத்யூஸ் ஷாகிப் அல் ஹசனிடம் சென்று முடிவை திரும்பப் பெறுமாறு கேட்டார். ஆனால், ஷாகிப் அல் ஹசன் மறுத்துவிட்டார். இதனால் வங்காளதேச அணியின் செயல் அவமானகரமானது என மேத்யூஸ் விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் இலங்கை வந்தால், அவர் மீது கல்வீசப்படும் என மேத்யூஸ் சகோதரர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேத்யூஸ் சகோதரர் டிரெவிஸ் கூறுகையில் "வங்காளதேச அணியின் சீனியர் ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசனுக்கு இலங்கையில் வரவேற்பு கொடுக்கப்பட மாட்டாது. விளையாடுவதற்காக இலங்கை வந்தால், அவர் மீது கல்வீசப்படும்.

    நாங்கள் இதனால் மிகவும் ஏமாற்றம் அடைந்தோம். ஜென்டில்மேன் கேம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டில், விளையாட்டு வீரர்களுக்கான ஸ்பிரிட் அவரிடம் இல்லை. மேலும், மனிதாபிமானத்தை அவர் காட்டவில்லை. அவர் மற்றும் அவர் அணியிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் சர்வதேச போட்டி அல்லது டி20 லீக் (லங்கா பிரிமீயர் லீக்) போட்டிகளில் விளையாட வந்தால், அவர் மீது கல்வீசப்படும். இல்லாவிடில், ரசிகர்கள் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றார்.

    • ஷாகிப்-அல்-ஹசன் மீதும் வங்காளதேச அணி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன்.
    • நீங்கள் அனைவரும் வெற்றி பெற விளையாடுங்கள். அது விதிகளுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடந்த போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் தோற்கடித்தது. இப்போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம் அவுட்' முறையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    2023-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான விதிப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர் கொள்ள வேண்டும். மேத்யூஸ் உடனடியாக மைதானத்துக்கு வந்தாலும் பந்தை எதிர்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி மற்ற இலங்கை வீரர்களிடம் கூறினார்.

    இதில் தாமதம் ஏற்பட்டதால் வங்காளதேச கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன், நடுவர்களிடம் அதை சுட்டிகாட்டி டைம் அவுட் கேட்டார். இதையடுத்து மேத்யூசுக்கு டைம் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தியுடன் வெளியேறினார்.

    வங்காளதேச அணி விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

    ஷாகிப்-அல்-ஹசன் மற்றும் வங்காளதேச அணியின் செயல் வெளிப்படையாக அவமானகரமானது. பீல்டிங்குக்கு இடையூறு அல்லது பந்து வீசுவதற்கு முன்பே கிரீசைவிட்டு நான் வெளியேறி இருந்து அவுட் கொடுத்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நான் இரண்டு நிமிடங்களில் களத்தில் இருந்தேன். நான் கிரீசில் இருந்தபோதுதான் எனது ஹெல்மெட் உடைந்தது. அதை நடுவர்களும் பார்த்தனர். அப்போது எனக்கு 5 வினாடிகள் இருந்தன.

    நான் ஹெல்மெட்டை காட்டிய பிறகு வங்காளதேச அணியினர் மேல்முறையீடு செய்ததாக நடுவர்கள் கூறினார்கள்.

    எனது இரண்டு நிமிடங்கள் முடிவடையாததால், பொது அறிவு எங்கே என்று கேட்டேன். இதை விளக்குவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணியோ அல்லது வீரரோ இவ்வளவு கீழ்நிலையில் இருப்பதை பார்த்ததில்லை. துரதிருஷ்டவசமாக ஹெல்மெட்டின் பட்டை உடைந்தது. அந்த சமயத்தில் இதுபோன்று (டைம் அவுட்) வேறு அணியும் செய்யும் என்று நான் நினைக்கவில்லை. எனது உபகரணம் செயலிழந்தது. இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை. ஹெல்மெட் இல்லாமல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது.

    ஷாகிப்-அல்-ஹசன் மீதும் வங்காளதேச அணி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். நீங்கள் அனைவரும் வெற்றி பெற விளையாடுங்கள். அது விதிகளுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் நான் இரண்டு நிமிடங்களுக்குள் களத்தில் இருந்தேன். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. விக்கெட் வீழ்ந்ததில் இருந்து நான் கிரீசுக்குள் நுழையும் வரையும் எனது ஹெல்மெட் உடைந்த பிறகு இன்னும் 5 வினாடிகள் மீதி இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் நடுவர்கள் மீது இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். 146 ஆண்டு கால சர்வ தேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரர் மேத்யூஸ் ஆவார்.

    • 3 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
    • ஆனால் அவர் களத்திற்குள் வந்து உடனே ஹெல்மெட் பிரச்சனை காரணமாக வேறு ஹெல்மெட் கேட்டார்.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 5 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 135 ரன்கள் இருந்த போது சமீரா அவுட் ஆனார். அடுத்த வீரராக மேத்யூஸ் களமிறங்கினார்.

    3 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால் அவர் களத்திற்குள் வந்து உடனே ஹெல்மெட் பிரச்சனை காரணமாக வேறு ஹெல்மெட் கேட்டார். அந்த ஹெல்மெட் வருவதற்கு காலதாமதம் ஆனதால் நடுவர் அவுட் கொடுத்தார்.

    மேத்யூஸ் இது குறித்து நடுவர் மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் ஆகியோரிடம் முறையிட்டார். ஆனால் இருவரும் விதிப்படி அவுட் என கூறினர். இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் மேத்யூஸ் வெளியேறினார்.

    இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் மேத்யூஸ்.

    • முதல் டெஸ்ட் போட்டியின் போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணிகள் மூன்று வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்று விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    பிரவீன் ஜெயவிக்ரமா

    இந்நிலையில் மேலும் ஒரு இலங்கை வீரருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை தொடர்ந்து இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரமாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    ×