search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nutritional egg"

    சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கருதி வருமான வரித்துறையினர் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் 12 மணி நேரம் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கருதி வருமான வரித்துறையினர் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் முட்டை வினியோக நிறுவன தலைவர் குமாரசாமி ஆகியோரின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

    முட்டை, சத்து மாவு, பருப்பு ஆகியவற்றை அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகிக்கப்பட்டதில் வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரே‌ஷன் நிர்வாக அலுவலர் எம்.சுதாதேவி ஐ.ஏ.எஸ். வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. நெற்குன்றத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் 16-வது மாடியில் அவர் வசித்து வருகிறார்.

    நேற்று காலை 6 மணிக்கு அவரது வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 2 மணி வரை சோதனை நீடித்தது. அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி அங்கு இருந்துள்ளார். 12 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி முடித்து அதிகாரிகள் வெளியே வந்தனர். அவரது வீட்டில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றினார்களா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் குமாரசாமியிடம் விசாரணை நடத்துகின்றனர். தேவைப்பட்டால் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. 

    ×