search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mullaivendhan joint dmk"

    முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தி.மு.க.வில் இருந்து விலகி இருந்தார். அவர் மீண்டும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். #dmk
    அரூர்:

    முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தி.மு.க.வில் இருந்து விலகி இருந்தார். அவர் மீண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். கட்சியில் இணைந்த பின்னர் முதன்முறையாக அரூர் வந்த முல்லை வேந்தனுக்கு தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

    கச்சேரி மேட்டில் மறைந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் அண்ணா சிலைக்கும் அம்பேத்கார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்:-

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைவிற்கு பிறகு தி.மு.க. தலைவராக தளபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய தலைமையில் கழகத்தில் பணியாற்ற அறிவாலயத்தில் மீண்டும் அவர் முன்னிலையில் இணைந்தேன். இடைப்பட்ட காலத்தில் வனவாசம் போல இருந்தாலும் இந்த மாவட்டத்தில் கழகத்தின் வளர்ச்சிக்கு கழக தோழர்களுடன் இணைந்து பாடுபடுவேன், வெற்றி பெறுவதற்கு களப்பணி ஆற்றுவோம் என கூறினார். 

    இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பொன்னுசாமி, ராஜாமணி, முன்னாள் பொறுப்பாளர்கள் செல்வராஜ், வேடம்மாள், ஒன்றிய செயலாளர் சண்முகநதி, வெங்கடேசன், பொதிகைவேந்தன், சாமிகண்ணு, பிரகாசம், வாசுதேவன், ரவிச்சந்திரன், முருகன், தமிழழகன், தமிழரசன், அழகு, அன்பு, திருமால், மதி, பாரதி, அறிவு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #dmk
    ×