search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "markandeya"

    மிருகண்ட மகரிஷியின் மகனான மார்க்கண்டேயனுக்கு சிவபெருமான் என்றும் 16 வயதுடன் இருக்க ஆசி வழங்கிய திருவிளையாடலை அறிந்து கொள்ளலாம்.
    மிருகண்ட மகரிஷி, வெகு காலமாக புத்திர பாக்கியம் இன்றி தவித்து வந்தார். அவருக்கு புத்திர பாக்கியம் அளித்த சிவன் “உனக்கு அறிவில் சிறந்த இறை பக்தி கொண்ட, 16 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழும் குழந்தை வேண்டுமா? அல்லது அறிவிலியாக இறைபக்தி அற்று பல ஆண்டு உயிர்வாழும் குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார்.

    அதற்கு மகரிஷி, ‘அறிவில் சிறந்த குழந்தையை வரமாக பெற்றுக் கொண்டார். அந்தக் குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார். அவனுக்கு 16 வயது நெருங்கியதும் மகரிஷிக்கும் அவரது மனைவிக்கும் கலக்கம் உண்டானது. அப்போது தன்னுடைய இறப்பை அறிந்த மார்க்கண்டேயன், “பக்தர்களின் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்ப்பார். நான் சிவனை வழிபடப் போகிறேன்” என்று கூறிவிட்டு ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று வழிபட்டான்.

    அவனது ஆயுள் முடியும் கடைசி நாளில், உயிரைப் பறிக்க எமன் வந்தான். மார்க்கண்டேயனோ, சிவலிங்கத்தை தழுவிக்கொண்டான். எமதர்மன் வீசிய பாசக் கயிறு, மார்க்கண்டேயனோடு, சிவலிங்கத்தையும் பற்றி இழுத்தது. அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட ஈசன், எமனை சம்ஹாரம் செய்ததோடு, மார்க்கண்டேயனை என்றும் 16 வயதுடன் இருக்க ஆசி வழங்கினார்.
    ×