search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mallaya"

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் விமானத்தை அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று ரூ. 35 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. #vijaymallya

    பெங்களூர்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

    லண்டனில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெற வில்லை.

    மல்லையாவிடம் இருந்து கடன் தொகையை மீட்க வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விஜய் மல்லையா மீது வரி ஏய்ப்பு புகார்களும் உள்ளன. குறிப்பாக சேவை வரித்துறைக்கு அவர் பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளார். அந்த சேவை வரியை வசூலிக்க, விஜய் மல்லையாவின் குட்டி விமானத்தை சேவை வரித்துறை அதிகாரிகள் 2013-ம் ஆண்டு முடக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அந்த குட்டி விமானத்தை ஏலத்தில் விற்பனை செய்து பணத்தை பெற சேவை வரித்துறையினர் அறிவிப்பு செய்தனர். முதல் தடவை நடந்த ஏலத்தில் யாரும் அதிக பணத்துக்கு ஏலம் கேட்க வில்லை. இரண்டாவது நடந்த ஏலத்திலும் அதிக தொகை கேட்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது முறையாக அந்த குட்டி விமானம் ஏலம் விடப்பட்டது. அப்போது மல்லையாவின் விமானம் ரூ. 35 கோடிக்கு ஏலம் போனது. அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று அந்த குட்டி விமானத்தை ஏலத்தில் எடுத்துள்ளது.

    சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு மல்லையாவின் விமானம் ஏலம் போய் இருக்கிறது. 650 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விமானம் 5 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டதால் தற்போது பறக்கும் நிலையில் இல்லை. இதனால்தான் அந்த விமானம் மிக, மிக குறைவாக ரூ.35 கோடிக்கு ஏலம் போனதாக தெரிய வந்துள்ளது.

    இந்த சொகுசு விமானத்தில் 25 பேர் பயணம் செய்யலாம். விமான பைலட், பணிப்பெண்கள் 6 பேர் இருந்தனர். இந்த சொகுசு விமானத்துக்குள் படுக்கை அறை, குளியல் அறை, மது அருந்த பார் வசதி, கான்பரன்ஸ் ஹால் ஆகிய வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ##vijaymallya #tamilnews

    ×