search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Accident"

    மதுரை அருகே இன்று வேட்டைக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாலிபர் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ளது வன்னி வேளாம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆடிமாத வழிபாட்டிற்காக காரைக்கேணி அருகே உள்ள உடமரம் முனியாண்டி கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டனர். அதன்படி 50-க்கும் மேற்பட்டோர் வேனில் புறப்பட்டனர்.

    கோவிலில் இன்று காலை தரிசனம் முடித்தபின்னர் சிலர் பாரிவேட்டைக்கு வேனில் கிளம்பினர்.

    காரைக்கேணி என்ற இடத்தில் வேன் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் வன்னி வேளாம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் மணிக்குமார் (வயது 17) சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் (25), அருள் பாண்டி (28), டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணி (20), முருகன் (38), மணிகண்டன் (18), மாரிகண்ணன் (21) உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் சதீஷ்குமார், அருள்பாண்டி, மணி, முருகன் ஆகிய 4 பேரும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    மதுரையில் இன்று காலை தங்கையை பள்ளியில் விட்டு திரும்பியபோது லாரி டயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    மதுரை:

    மதுரை புதுஜெயில்ரோடு மில்காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரூபேஷ் (வயது 19). இவர் மதுரை கல்லூரியில் படித்து வந்தார்.

    தினமும் காலை தனது தங்கையை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

    இன்று காலையும் ரூபேஷ் வழக்கம்போல் தனது தங்கையை பள்ளிக்கு அழைத்து சென்றார். கருடர் பாலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்கையை இறக்கிவிட்டு விட்டு ரூபேஷ் வீட்டுக்கு புறப்பட்டார்.

    பள்ளியில் இருந்து சிறிது தூரம் கூட செல்லாத நிலையில் அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக் கிள் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி ரூபேஷ் கீழே விழுந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின் டயர் ரூபேஷ் மீது ஏறியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பள்ளி அருகே அண்ணன் விபத்தில் சிக்கி பலியானதை பார்த்து அவரது தங்கை கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. #Tamilnews
    ×