search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student dies"

    மாதவரம் ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    மாதவரம்:

    அம்பத்தூர் வெங்கடாபுரம் பழைய டவுன்ஷிப் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார். இவர் அ.தி.மு.க. பிரமுகர். இவரது மகன் கவுதம் (வயது 17) சென்னையில் தனியார் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். தனது சகோதரர் ராகுலுடன் மோட்டார் சைக்கிளில் சவுகார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    மாதவரம் ரவுண்டானா அருகே ஜி.எஸ்.டி சாலையில் வந்தபோது செங்குன்றத்திலிருந்து மாதவரம் நோக்கி சிமெண்ட் கற்கள் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கவுதம் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகுல் சிறு காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினார். கண் முன்னே தம்பி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ராகுல் பித்துப் பிடித்தது போல் உள்ளார். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வந்தனர்.
    கோவை அண்ணா சிலை அருகே இன்று காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.
    கோவை:

    கோவை -அவினாசி சாலை அண்ணா சிலை பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலை வழியாக சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும் உக்கடம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காந்திபுரம் பஸ் நிலையம் செல்லும் டவுன் பஸ்கள் அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை வழியாக தான் சென்று வருகின்றன.

    இந்த அண்ணாசிலையில் 4 ரோடு சந்திப்பில் சிக்னல் உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் நடைபெற்று உள்ளது.

    கோவை ஆர்.எஸ்.புரம் லோகமான்ய வீதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் மல்லிகை அர்ஜூன் (19). இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    மேலும் பகுதி நேரமாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை 7.30 மணியளவில் மாணவர் மல்லிகை அர்ஜூன் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் செல்ல வந்தார்.

    அண்ணா சிலை சிக்னலில் அவர் சிக்னலுக்காக காத்து இருந்தார். சிக்னல் விழுந்ததும் அவர் மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் செல்வதற்காக வலது புறம் திரும்பினார்.

    அப்போது காந்திபுரம் செல்லும் தனியார் பஸ் வந்தது. சிக்னலில் இந்த பஸ் காந்திபுரம் நோக்கி இடது புறமாக திரும்பியது. அப்போது மாணவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மாணவர் மல்லிகை அர்ஜூன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் மாணவரை மீட்டு வேனில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் மாணவர் மல்லிகை அர்ஜூன் பலியானார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பஸ் டிரைவரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்றது.

    கோவை அண்ணாசிலை சிக்னல் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. உக்கடம், ரெயில் நிலையம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் அண்ணா சிலை சிக்னலில் நிற்காமல் இடது பக்கமாக திரும்பி சென்று விடலாம்.

    ஆனால் பீளமேடு, நவ இந்தியா போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சிக்னலில் நின்று தான் செல்ல வேண்டும். சில சமயம் காந்திபுரம் செல்லும் தனியார் பஸ்கள் வேகமாக வருவதால் சிக்னலில் நிற்கும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.

    இதே போல் தான் இன்று காலையும் தனியார் பஸ் மோதி மாணவர் உயிரை பறித்து விட்டது. எனவே சிக்னல் பகுதியில் அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பலியான மாணவர் மல்லிகை அர்ஜூன் தந்தை சிவசுப்பிரமணியன் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    மாணவர் மல்லிகை அர்ஜூன் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்க முன் வந்தனர். ஆனால் விபத்தில் மாணவர் இறந்து விட்டதால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியவில்லை. மாணவரின் தோல் மட்டும் தானமாக பெறப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    திண்டுக்கல் அருகே இன்று மினிபஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள குட்டியபட்டியில் இருந்து அனுமந்தராயன் கோட்டைக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை அந்த பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. பஸ்சை தர்மத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் தங்கவேல் (வயது25) என்பவர் ஓட்டி வந்தார். கருப்பையா என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    கொட்டப்பட்டி அருகே பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர்.

    படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் வழியிலேயே பொன் மாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த இன்னாசி மகன் மார்க்ராஜா (19) என்பவர் உயிரிழந்தார். இவர் திருஇருதய கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த விபத்தில் அபிநயா (13), பிரியதர்ஷினி (17), செல்லாயி (42), தங்கத்துரை (59), மைதிலி (15), ராமசாமி (32), செல்வி (40), சவுந்தர் (20), தமிழ்ச்செல்வன் (14), பிரகாஷ் (16), சுவேதா (17), ஜெயந்தி (20) உள்பட 25 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகள் ஆவார்கள். இதனால் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு டிரைவர் தங்கவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரையில் இன்று காலை தங்கையை பள்ளியில் விட்டு திரும்பியபோது லாரி டயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    மதுரை:

    மதுரை புதுஜெயில்ரோடு மில்காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரூபேஷ் (வயது 19). இவர் மதுரை கல்லூரியில் படித்து வந்தார்.

    தினமும் காலை தனது தங்கையை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

    இன்று காலையும் ரூபேஷ் வழக்கம்போல் தனது தங்கையை பள்ளிக்கு அழைத்து சென்றார். கருடர் பாலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்கையை இறக்கிவிட்டு விட்டு ரூபேஷ் வீட்டுக்கு புறப்பட்டார்.

    பள்ளியில் இருந்து சிறிது தூரம் கூட செல்லாத நிலையில் அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக் கிள் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி ரூபேஷ் கீழே விழுந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின் டயர் ரூபேஷ் மீது ஏறியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பள்ளி அருகே அண்ணன் விபத்தில் சிக்கி பலியானதை பார்த்து அவரது தங்கை கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. #Tamilnews
    கேரள மாநிலம் திருச்சூரில் பஸ் ஏறி இறங்கிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து குன்னங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கேரள மாநிலம் திருச்சூர் புழக்கல் பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகள் கிருஷ்னேந்து (வயது 18). கல்லூரி மாணவி. இவர் இன்று காலை அங்குள்ள உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்றார். அங்கு அவர்களை பார்த்து விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார்.

    புழக்கல் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே திருச்சூரில் இருந்து குன்னங்குளத்திற்கு ஒரு தனியார் பஸ் வேகமாக வந்தது. எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவி ரோட்டில் தவறி விழுந்தார்.

    அப்போது அதே பஸ்சின் பின் சக்கரம் மாணவி மீது ஏறி இறங்கியது. இதில் மாணவி கிருஷ்னேந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குன்னங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவையில் இன்று அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கன்னியாகுமரி மாவட்டம் சடைய நல்லூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் நரேஷ் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கோவை காந்தி புரத்தில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். நரேஷ் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். கோவை -அவினாசி சாலை லட்சுமி மில் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது பீளமேடுக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ் திடீரென நரேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர் தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரம் நரேஷ் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் நரேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக லட்சுமி மில் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நரேஷ் விபத்தில் பலியான சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவர் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். #Tamilnews
    ×