search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madrid Open"

    பிரான்ஸ் வீராங்கனை கிரிஸ்டினா மிலாடெனோவிக்கை 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி மாட்ரிட் காலிறுதிக்கு முன்னேறினார் மரியா ஷரபோவா. #madridOpen
    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டாக கருதப்படும் ஓபன்களில ஒன்றான் மாட்ரி, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா பிரான்சின் கிரிஸ்டினா மிலாடெனோவிக்கை எதிர்கொண்டார். இதில் மரியா ஷரபோவா 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இவருடன் கிவிடோவா, சுவாரஸ் நவோரா, கார்சியா, பிளிஸ்கோவா, பெர்ட்டென்ஸ், ஹாலெப், கசட்கினா ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினார்கள்.



    காலிறுதியில் ஷரபோவா பெர்ட்டென்ஸை எதிர்கொள்கிறார். ஷரபோவா தடைக்காலம் முடிந்து மீண்டும் களமிறங்கும்போது விமர்சனம் செய்தவர் கிரிஸ்டினா மிலாடெனோவிக். ஷரபோவாவின் முதல் தொடரான ஸ்டட்கார்ட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஷரபோவாவை தோற்கடித்திருந்தார். தற்போது அதற்கு பழிதீர்த்துள்ளார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #MadridOpen #NovakDjokovic
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 3-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 7-5, 6-3 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ்சை தோற்கடித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீபென்ஸ்சை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 2-6, 2-6 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீராங்கனை பெர்டென்ஸ்சிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து நடையை கட்டினார்.  #MadridOpen #NovakDjokovic 
    ×