என் மலர்

  நீங்கள் தேடியது "Machineries"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல் பாலீஸ் செய்யும் 19 எந்திரங்கள் மற்றும் ஒரு வெல்டிங் எந்திரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
  • மின்மோட்டார் மற்றும் காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது.

  நெல்லை:

  அம்பை பண்ணை சங்கரையா தெருவை சேர்ந்தவர் வைர முத்து(வயது 74). இவர் சின்ன சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனது வயலில் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  சம்பவத்தன்று அவரது வயலில் நிறுத்தியிருந்த பவர் டிரில்லர், அங்கிருந்த மின்மோட்டார் மற்றும் காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக வைரமுத்து அம்பை போலீசில் புகார் அளித்தார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

  அம்பை சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கணேசன்(29). இவர் அடையகருங்குளம் ரைஸ்மில் தெருவில் கல் செதுக்கும் தொழில் நடத்தி வருகிறார். கடந்த 3-ந்தேதி வழக்கம்போல் அவர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

  மறுநாள் காலை சென்று பார்த்தபோது கல் பாலீஸ் செய்யும் 19 எந்திரங்கள் மற்றும் ஒரு வெல்டிங் எந்திரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

  இதுதொடர்பாக வி.கே.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன எந்திரங்கள் மதிப்பு ரூ.2.80 லட்சம் ஆகும்.

  ×