search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Load Auto"

    • கூரை செட்டில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
    • தீயினால், செட் முழுவதும் எரிந்து சாம்பலானது. அங்கிருந்த பொருட்களும் தீயில் கருகி நாசமாயின.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் காமராஜர் பூங்கா அருகே லோடு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளது. இங்கு ஓட்டுனர்களுக்கான கூரை செட் உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் ரூ.30 ஆயிரம் செலவில் இது புதுப்பித்து கட்டப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த கூரை செட்டில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக திருச்செந்தூரில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் அந்த செட் முழுவதும் எரிந்து சாம்பலானது. அங்கிருந்த பொருட்களும் தீயில் கருகி நாசமாயின.

    இச்சம்பவம் பற்றி ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தினர். ஓட்டுநர் சங்கத்தின் அருகில் நின்றிருந்த மொட்டை பனை ஒன்று காற்றின் வேகம் காரணமாக முறிந்து விழுந்துள்ளது. இதனால் மின் கம்பி அறுந்து விழுந்ததில் இந்த தீ விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.

    ×