search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lighting attack"

    பெரம்பலூரில் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 ஆடுகளும் கருகி இறந்தன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கூடலூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 38). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக வயல் உள்ளது. அதில் ஆடுகளுக்கு தளை பறிப்பதற்காக சென்றார். அப்பகுதியில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது மழைக்காக புளிய மரத்தடியின் கீழ் அறிவழகனும் அவரது மனைவி கலையரசியும் ஒதுங்கி நின்றனர். எதிர்பாரதவிதமாக அறிவழகன் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். 

    இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    குன்னம் வட்டம் கோவில் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி நல்லம்மாள் (47). இவர் தனது வயலில் பயிரிட்டு இருந்த பருத்தி செடியில்களை எடுப்பதற்காக சென்றிருந்தார். அப்போது பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதற்கிடையே  திடீரென அந்த பகுதியில் தாக்கிய இடியால் நல்லம்மாள் இறந்தார். குன்னம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அணைப்படி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 50) விவசாயி. இவர் சுமார் 100 ஆடுகள் வளர்த்து வருகிறார். 

    இந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து வயலுக்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டி சென்றார் அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அங்குள்ள குடிநீர் ஏரிக்கரை ஓரத்தின் புளிய மரத்தடியின் கீழ் ஒதுங்கி நின்றது. 

    அதில் ஒதுங்கி நின்ற ஆடுகள் சில அருகிலுள்ள டிராக்டர் இணைப்பு இரும்பு பெட்டியில் கீழ் ஒதுங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மரத்தில் பட்டு பின்னர் அருகில் இருந்த டிராக்டர் இணைப்பு பெட்டியில் மின்னல் இறங்கியது. 
    அதில் இரும்பு பெட்டியின் கீழ் ஒதுங்கி நின்ற 12 ஆடுகள் கருகி இறந்தன. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின்னல் தாக்கி பலியான ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் ஆகும். மேலும் கொளக்காநத்தம் கால்நடை மருத்துவர் ராஜேஷ் விரைந்து வந்து மின்னல் தாக்கி இறந்த ஆடுகளை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் பலியான ஆடுகள் தர்மராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
    ×