search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lakh robbery"

    சென்னையில் ஏ.டி.எம். பணம் ரூ. 22 லட்சத்தை திருடிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தனியார் நிறுவன ஊழியர் 2 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

    அம்பத்தூர்:

    செங்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜா. இவரது நண்பர் ஜான்சன் பிரபு. இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு சேத்துப்பட்டில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    அப்போது ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்துகொண்டு அயனாவரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்மில் ரூ. 8 லட்சமும் ஐ.சி.எப்.பில் உள்ள ஏ,டி.எம்மில் ரூ. 9 லட்சமும், ராஜமங்கலத்தில் உள்ள ஏ.டி.எம். ரூ. 5 லட்சமும் கொள்ளையடித்துச் சென்று விட்டு தலைமறைவானார்கள்.

    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சார்பில் ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக குற்றவாளியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ராஜாவும் ஜான்சன் பிரபுவும் கோவையில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்சியில் பணிக்கு சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் ஏ.டி.எம். பணம் ரூ. 56 லட்சத்தை கையாடல் செய்தனர். இது குறித்து கோவை போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த தகவல் ஐ.சி.எப். காவல் நிலைய போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி தலைமையில் சிறையில் உள்ள ராஜாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

    ஜான்சன் பிரபு கைது செய்த சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது. அவரை தேடி வருகிறார்கள்.

    ×