search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kothandaramaswamy temple"

    நாகர்கோவில் கோட்டார் கோதண்டராமசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகர்கோவில் கோட்டார், வாகையடி கீழரதவீதியில் சவுராஷ்டிரா சமுதாய பதினொன்று குடும்பத்தினருக்கான கோதண்டராமசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் திருமுறை சாத்துதல், யானை மீது புனித நீர் கொண்டு வருதல், யாக கால வேள்வி பூஜை, 108 கலச பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தன.

    விழாவில் நேற்று காலையில் கோவில் ராஜகோபுரம், விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோதண்ட ராமசாமி, சீதா, லட்சுமணர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றன. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., சவுராஷ்டிரா மத்திய சபா தலைவர் டாக்டர் ஸ்ரீராம்சேகர், பொது செயலாளர் சாந்தராம், சவுராஷ்டிரா முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ், கோட்டார் இந்து வாணியர் சமுதாய சங்கரபாண்டியன், செங்குந்தர் சமுதாய வள்ளியானந்தம், இசங்கன்விளை இந்து நாடார் சமுதாய மகேஷ்வரன், கோட்டார் இந்து வெள்ளாளர் சமுதாய மாதவன்,சுப்புலெட்சுமி சில்க்ஸ் புத்தாராம் மற்றும் பல்வேறு சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.

    மாலையில் கோதண்டராமர், சீதா பிராட்டி திருக்கல்யாணம், சாமி திருவீதி உலா வருதல் போன்றவை நடந்தது.

    விழா ஏற்பாடுகளை தலைவர் புசட்டி சங்கரன், செயலாளர் காசிராஜாராம், பொருளாளர் தஸ்மா ஸ்ரீதர், துணை தலைவர் குஜூலுவாசுவாமி அய்யனார், துணை செயலாளர் சித்தா ரெங்கநாதன் மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள், கோட்டார் சவுராஷ்டிரா சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
    ×