search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koova"

    கவுதம் மேனன் தனது பேனரான ஒண்ராகா ஒரிஜினல்ஸ் மூலம் பாடல் ஆல்பங்களை உருவாக்கி வரும் நிலையில், அவரது அடுத்த ஆல்பத்திற்காக அதர்வா - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கின்றனர். #BodhaiKodhai
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கவுதம் மேனன் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அதேபோல் ஒண்ராகா ஒரிஜினல்ஸ் மூலம் பாடல் ஆல்பங்களை தயாரித்து வருகிறார். 

    ஏற்கனவே ஒண்ராகா ஒரிஜினல்ஸ் வெளியிட்ட `கூவா', `உளவிறவு' உள்ளிட்ட ஆல்பங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் `உளவிறவு' பாடலில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தொலைக்காட்சி பிரபலம் திவ்யதர்ஷினி ரொமேன்ஸ் செய்யும்படியாக அந்த பாடல் உருவாகி இருந்தது.



    இந்த நிலையில், ஒண்ராகா ஒரிஜினல்ஸின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `போதை கோதை' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த பாடலில் அதர்வா - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கின்றனர். மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார். இந்த பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. #BodhaiKodhai 


    ×