search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kochi Water Metro"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான மாணவர்கள் திரண்டு இருந்தனர்.
    • கேரளாவில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடப்பட்டதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ரெயில் நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான மாணவர்கள் திரண்டு இருந்தனர். இதுபோல காசர்கோடு செல்லும் வந்தே பாரத் ரெயிலிலும் மாணவர்கள் அமர்ந்து இருந்தனர். அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் ஏறிய பிரதமர் மோடி அங்கு அமர்ந்து இருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். அதன் பிறகு அவர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியம் சென்றார்.

    அங்கு கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகம், பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சூரத் புறப்பட்டு செல்கிறார்.

    கேரளாவில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடப்பட்டதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுமார் 3 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த கொச்சி மெட்ரோ படகுகளில் நாளை முதல் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த படகுகளில் செல்ல குறைந்தபட்சம் ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ×