search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed in Coimbatore"

    கோவையில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சலுக்கு ஆசிரியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு 84 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #DengueFever #Swineflu
    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நாளுக்கு நாள் டெங்கு, பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை. ஏராளமானோர் காய்ச்சலக்கு பலியாகி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒன்னதலை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 56). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு சந்திரசேகரின் ரத்தத்தை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர் தனி வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார்.

    மற்றொரு சம்பவம்...

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துரை சித்தூரை சேர்ந்தவர் ரத்தினம் (60). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. பின்னர் ரத்தினம் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் அவரது ரத்தத்தை பரிசோதனை செய்தனர்.

    அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ரத்தினம் பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 71 பேர் என மொத்தம் 84 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #DengueFever #Swineflu



    ×