search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Woman Suicide"

    கேரளாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், தாய் மற்றும் தந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் தாலோலபரம்பு என்ற இடத்தில் வசிப்பவர் சுகுமார் (57). இவரது மனைவி ஷீனா (55). இவர்களது மூத்த மகள் சூர்யா (26). 2-வது மகள் சுவர்ணா (24).

    சுகுமாரன் ரப்பர் தோட்டத்தொழிலாளியாக பணியாற்றினார். மகள்கள் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்கள். மூத்த மகள் சூர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் 22-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் நேற்று சுகுமார், அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுவர்ணா, பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது உறவினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 4 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சுகுமார், ஷீனா, சூர்யா ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். சுவர்ணா ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவம் குறித்து கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட சூர்யா கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் இப்படி சூர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது அவரையும், குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் வேதனையுடன் இருந்துள்ளனர். இந்த மனவேதனையில் அவர்கள் ஆசிட் குடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுதான் காரணமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    சிகிச்சை பெறும் சுவர்ணா உடல் நலம் தேறி வந்து அவரிடம் விசாரித்தால் 3 பேர் பலி தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    கொடைக்கானலில் பாலியல் தொந்தரவால் கேரள பெண் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மாப்பிள்ளை முதலியார் தெருவைச் சேர்ந்த சாஜ் மனைவி ரோகினி (வயது 40). இவர்களுக்கு 8 குழந்தைகள் உள்ளனர். கணவரும் முத்த மகனும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போலீசார் ரோகினியின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் அக்கம் பக்கத்தில் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் அடிக்கடி செல்போனில் ரோகினியிடம் தவறான முறையில் பேசி வந்தார். கணவர் வெளியூரில் வசிப்பதை வைத்து தனது ஆசைக்கு இணங்கும்படி தொந்தரவு செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

    ரோகினி தனது அறையில் கைப்பட மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் தனது சாவுக்கு ஜெயசீலன்தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார். எனவே ஜெயசீலன் பாலியல் தொந்தரவு செய்ததால் அவர் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ×