search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jipmer Hospital"

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிக்கு கழிவறையில் பெண் குழந்தை பிறந்தது. #JipmerHospital
    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா (24). இவர் கர்ப்பம் அடைந்திருந்தார்.

    பிரசவத்துக்காக சுதாவை உறவினர்கள் கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து இருந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.

    அதைத்தொடர்ந்து சுதா பிரசவத்துக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பிறக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

    ஆனால், சுதா பிரசவ வலியால் துடித்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சுதா சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் அவரையும், குழந்தையையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவரும் நலமாக உள்ளனர்.

    இதற்கிடையே சுதாவின் உறவினர்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அலட்சியம் காரணமாகத்தான் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JipmerHospital
    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இன்று காலை ‘திடீர்’ தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் அமைந்துள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    மேலும் உள்நோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

    நோயாளிகளுடன் அவர்களது உறவினர்களும் தங்கி இருக்க ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இந்த நிலையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் 2-வது மாடியில் நோயாளிகள் பதிவேடுகள் வைக்கப்பட்டு இருந்த அறையில் இன்று காலை 8.30 மணிக்கு திடீரென புகை மூட்டம் கிளம்பியது. சிறிது நேரத்தில் குபீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    உடனே அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து அங்கும், இங்குமாக ஓடினார்கள்.

    இதையடுத்து முன் எச்சரிக்கையாக அந்த கட்டிடத்தில் இருந்த அனைத்து நோயாளிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மற்ற வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து தகவல் அறிந்த கோரிமேடு மற்றும் புதுவை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடத்தில் தீயை முழுவதும் அணைத்தனர்.

    குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த திடீர் தீ விபத்து காரணமாக ஜிப்மர் ஆஸ்பத்திரியே பெரும் பரபரப்புக்குள்ளானது. #jipmer
    ×