search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "israel war"

    • எங்கள் முழு பலம் கொண்டு நாங்கள் தாக்குதலை தொடர்ந்து வருகிறோம் என தலைப்பிட்டு உள்ளார்.
    • நெதன்யாகுவின் டுவிட் பதிவை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

    பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். 5-வது நாளாக இன்று நடைபெற்று வரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.

    இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழியே தாக்குதல் நடத்த கூடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

    எங்கள் முழு பலம் கொண்டு நாங்கள் தாக்குதலை தொடர்ந்து வருகிறோம் என தலைப்பிட்டு உள்ளார். இந்நிலையில், துருக்கியின் தேசிய கல்வி துறையின் துணை மந்திரி நஜிப் இல்மாஸ், நெதன்யாகுவின் டுவிட் பதிவை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

    அதில், ஒரு நாள், உங்கள் மீதும் தாக்குதல் நடத்துவார்கள். நீங்களும் மரணம் அடைவீர்கள் என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    • இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுள்ளது.
    • தெற்கு லெபனானுக்கு செல்ல வேண்டாம் என நெதர்லாந்து அறிவிப்பு.

    இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன காசா பகுதி பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், தாக்குதல் நடத்தியது.

    இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி உடனடியாக இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது.

    போர், ஐந்தாம் நாளான இன்றும் தீவிரமாக தொடர்கிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் படைகளால் தெற்கு லெபனான் நகரங்கள் மீது குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இஸ்ரேலின் வடக்கு பகுதியானது லெபனானில் இருந்து தாக்கப்பட்ட நிலையில், எதிர்த் தாக்குதல் நடந்து வருகிறது.

    மேலும், லெபனானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுள்ளது.

    இதற்கிடையே, தெற்கு லெபனானுக்கு செல்ல வேண்டாம் என நெதர்லாந்து அறிவிறுத்தியுள்ளது.

    • இஸ்ரேல் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்படும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
    • ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களின் வீடுகளுக்குள் சென்று துப்பாக்கி சூடு நடத்த தொடங்கி உள்ளனர்.

    இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் இஸ்ரேல் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்படும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. வேன், ஜீப் உள்பட பல வாகனங்களில் பெண்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் காணப்பட்டன. அந்த வீடியோவில் துப்பாக்கிகளுடன் ஹமாஸ் பயங்கரவாதிகள் மிரட்டுவதும் இடம் பெற்றுள்ளது.

    இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், "ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களின் வீடுகளுக்குள் சென்று துப்பாக்கி சூடு நடத்த தொடங்கி உள்ளனர். இந்த செயலுக்காக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுத்தே தீர வேண்டும். எங்கள் நாட்டு மக்களை காக்க நாங்கள் அதிகபட்ச அதிரடிகளில் ஈடுபடுவோம்" என்று கூறப்பட்டுள்ளது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது.
    • சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரித்தது. இது சர்வதேச பொருளாதார விவகாரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. போர் நீடித்து மேலும் அதிகமாகும் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.

    • ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் பொருத்தப்பட்ட பாரா-கேடர்களை பயன்படுத்தும் என்று இஸ்ரேலியப் படைகள் எதிர்பார்க்கவில்லை.
    • போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் பலவகை அரிய விமானங்கள் உள்ளன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்து உள்ளனர்.

    சமீபத்திய மின்னல் வேக தாக்குதலுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.

    2014-ல் இது குறித்து உளவுத்துறை எச்சரித்தும் இஸ்ரேல் அலட்சியப்படுத்தியது. அதன் விளைவுகளை தற்போது இஸ்ரேல் கண்டு வருகிறது. ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம் பயங்கரவாதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

    அவர்கள் வெளிநாடுகளில் இருந்து, ஏவுகணைகளை தயாரித்தல், ஏவுதல், மனித வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நவீன தொழில்நுட்பத்தை கையாள பயிற்சி பெற்றுள்ளனர்.

    சமீபத்திய "ஆபரேஷன் ஆல்-அப்பா புயல்" போன்ற அம்சங்களைக் கொண்டிருக்க ஹமாஸ் தெளிவான திட்டங்களை வகுத்துள்ளது.

    குறிப்பாக, ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் பொருத்தப்பட்ட பாரா-கேடர்களை பயன்படுத்தும் என்று இஸ்ரேலியப் படைகள் எதிர்பார்க்கவில்லை. காற்றில் பறந்து வந்து ஏவுகணைகளை வீசுகின்றனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பலர் தற்கொலைப்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸ் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டது. அவர்கள் நகரங்களில் இறங்கி, கண்ணில் படும் பொதுமக்களையும், படை வீரர்களையும் பணயக்கைதிகளாக பிடித்தனர்.

    இப்படி ஊடுருவிய நூற்றுக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடர்கள் பயங்கரவாதிகளிடம் இருப்பதாக நம்பப்படுகிறது.

    கடலில் இருந்து சிறிய படகுகளில் காசா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மறுபுறம், பயங்கரவாதிகளும் பிக்-அப் டிரக்குகளில் கனரக எந்திர துப்பாக்கிகளுடன் இஸ்ரேலுக்குள் விரைந்தனர்.

    இஸ்ரேலுக்கு ஆதரவாக கிழக்கு மத்திய தரைக்கடலுக்கு விமானம் தாங்கி கப்பலை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்:-

    அமெரிக்காவின் போர்டு கேரியர் கடற்படை குழு இஸ்ரேல் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அந்த போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் பலவகை அரிய விமானங்கள் உள்ளன.

    இந்த கப்பலில் உள்ள போர் விமானங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை. அதே போல் பயங்கரவாதிகளுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்குபவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கும்.

    வர்ஜீனியாவை தளமாகக்கொண்ட விமானம் தாங்கி கப்பல் தற்போது மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரைந்துள்ளது.

    இதில் யுஎஸ்எஸ் நார்மண்டி, யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர், யுஎஸ்எஸ் ராம்பேஜ், யுஎஸ்எஸ் கார்னி, யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் மற்றும் எப்-35, ஏபி-15, எப்-16 மற்றும் ஏ-10 போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அமெரிக்காவின் இந்த அதிநவீன போர்க்கப்பல் எதிரிகள் உள்ள பகுதிகளை நாசமாக்கும் சக்தி கொண்டது. பயங்கரவாதிகள் உள்ள இடங்களை குறி வைத்து துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் இதில் உள்ளன. மேலும் அதிநவீன கண்காணிப்பு கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிரிகளை அமெரிக்க கப்பல் படை துல்லியமாக கணித்து அதற்கேற்றார் போல் தாக்குதல்களை நடத்தும். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இந்த கப்பல் இஸ்ரேல் சென்றதும் பயங்கரவாதிகளுக்கு பேரழிவு ஏற்படும் என கூறப்படுகிறது.

    • சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகுதான் இஸ்ரேல் தனது பதிலடியை ஆரம்பித்தது.
    • பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு வசதியாக 20 ஆயிரம் பேரை இஸ்ரேல் இடமாற்றம் செய்துள்ளது.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல் நாட்டுக்கும் அதன் அருகில் உள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீரென போர் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த சனிக்கிழமை காலை 6.35 மணிக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் 22 இடங்களில் ஊடுருவி அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் முக்கிய இடங்களில் குண்டுகளை வீசினார்கள்.

    பல இடங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்களது வாகனங்களில் ஏற்றி பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். காசா பகுதிக்குள் அப்படி கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பிணை கைதிகள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

    6.35 மணி முதல் 8.30 மணிக்குள் சுமார் 2 மணி நேரத்தில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் முதலில் இஸ்ரேல் அதிர்ச்சியால் நிலை குலைந்தது. அந்த நாட்டின் வான் மண்டல பாதுகாப்பு கை கொடுக்காததால் இஸ்ரேலின் பல பகுதிகள் தரைமட்டமானது.

    சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகுதான் இஸ்ரேல் தனது பதிலடியை ஆரம்பித்தது. காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தலைமையகம் உள்பட பல கட்டிடங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. அடுத் தடுத்து ஏவுகணை தாக்கு தலையும் இஸ்ரேல் மேற்கொண்டது.

    நேற்று 2-வது நாளாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் நடந்தது. இதில் இஸ்ரேலில் சுமார் 700 பேரும், காசாவில் 500 பேரும் என சுமார் 1,200 பேர் பலியானார்கள். 10 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) 3-வது நாளாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நீடித்தது. இன்று அதிகாலை இரு தரப்பினரும் ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்குதலை நடத்தினார்கள். இதற்கிடையே 22 வழிகளில் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை இன்று இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.

    இதற்காக இஸ்ரேல் தெற்கு பகுதிகளுக்கு கூடுதல் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் இஸ்ரேல் தெற்கு பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இஸ்ரேல் தெற்கு பகுதிக்கும் காசாவுக்கும் இடையே உள்ள பகுதி மிக பயங்கரமான போர்க்களமாக மாறி உள்ளது.

    பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு வசதியாக 20 ஆயிரம் பேரை இஸ்ரேல் இடமாற்றம் செய்துள்ளது. பொதுமக்களை ராணுவ பதுங்கு அரங்குகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்து உள்ளனர். எனவே வரும் நாட்களில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் முன்களத்தில் நிற்கும் இஸ்ரேல் வீரர்களில் இதுவரை சுமார் 54 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் நீண்ட காலம் போருக்கு தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எனவே போர் மேலும் உக்கிரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    • இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிக்கிறது.
    • பயங்கரவாதமும், போரும் தீர்வுகளை கொண்டுவருவதில்லை.

    வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு பொதுமக்கள் மத்தியில் பேசிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து வேதனை தெரிவித்தார்.

    இது குறித்து அவர் பேசுகையில், "இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிக்கிறது. பயங்கரவாதமும், போரும் தீர்வுகளை கொண்டுவருவதில்லை, மரணத்தை மட்டுமே கொண்டு வருகின்றன. போர் ஒரு தோல்வி. ஒவ்வொரு போரும் தோல்விதான். எனவே போரை உடனடியாக நிறுத்தும்படி இருதரப்பையும் வேண்டுகிறேன்" என்றார்.

    இதனிடையே இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் அமைதி காக்கும்படி இருதரப்பையும் வலியுறுத்தியுள்ளது.

    இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது.

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 300 ஆகவும், காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

    காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அங்குள்ள பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் கேட்டுக் கொண்டார்.

    இதற்கிடையே, ஹமாஸ் தாக்குதலால் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகளைக் கைப்பற்றிய ஹமாஸ் பயங்கரவாதிகளால் இஸ்ரேலிய குடும்பம் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, குண்டு சத்தங்களுக்கு மத்தியில் இந்த குடும்பம் பயத்தில் உறைந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இவர்களைப் போன்ற பல குடும்பங்கள் இஸ்ரேலில் பிணைக் கைதிகளாக சிக்கி தவித்து வருவதாக தகவல் வௌியாகி உள்ளது.

    • காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர்.
    • ஜெருசலேமுக்கு மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி தனது குடும்பத்துடன் புனிய யாத்திரை சென்றார்.

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 300 ஆகவும், காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

    காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அங்குள்ள பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில், இஸ்ரேலில் போருக்கு மத்தியில் மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெருசலேமுக்கு மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி தனது குடும்பத்துடன் புனிய யாத்திரை சென்றார்.

    இந்நிலையில், போர் பகுதி அருகே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், வான்விரோய் கர்லூகி பாதுகாப்பாக நாடு திரும்ப வழிவகை செய்வதாக மேகாலயா முதல்வர் உறுதி செய்துள்ளார்.

    ×