search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Isha"

    • மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
    • வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.

    'ஈஷா கிராமோத்வசம்' திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் வேலூர் வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள வன்னிவேடு பகுதியில் அமைந்திருக்கும் வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியும் மற்றும் இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன. வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், த்ரோபால் போட்டியில் மொத்தம் 10 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 6 அணிகளும் பங்கேற்க உள்ளன.

    இப்போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். இதை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.

    இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள். இத்திருவிழாவில் ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராம பகுதிகளில் மக்கள் சத்குருவின் படத்தை வைத்து பூஜைகள் செய்தும், இனிப்புகள் வழங்கியும், அன்னதானமிட்டும் பெரு விமர்சையாக கொண்டாடினர்.  
    • ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில், மலைவாழ் மக்கள் அவர்களுக்கே உரிய மேளங்கள் முழங்க நடனமாடி கொண்டாட்டத்துடன் விழாவை நடத்தினர்

    சத்குரு பிறந்தநாளான செப்.3ந்தேதியை ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களும், கிராம மக்களும் ஒன்று கூடி பக்தியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சத்குருவின் படத்தை வைத்து பூஜைகள் செய்தும், இனிப்புகள் வழங்கியும், அன்னதானமிட்டும் பெரு விமர்சையாக பக்தியுடன் கொண்டாடினர். 

    ஈஷா யோகா மையத்தை சுற்றியிருக்கும் கிராம பகுதிகளான மத்வராயபுரம், முட்டத்துவயல் ஆகிய கிராம பகுதிகளில் சத்குருவின் படத்தை வைத்து வழிபட்டு அன்னதானமிட்டு கொண்டாடினர். மேலும் தேவராயபுரம், விராலியூர், நரசிபுரம், இந்திராநகர் (விராலியூர்), காந்தி காலனி (செம்மேடு) ஆகிய பகுதியில் சத்குருவின் படம் வைத்து பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியையும் பக்தியையும் பகிர்ந்து கொண்டனர்.

    இதைப்போலவே மலைவாழ் மக்கள் வசிக்கும் பஞ்ச கிராமம் என்று அழைக்கப்படும் பட்டியார் கோவில் பதி, மடக்காடு, தாணிக்கண்டி, முள்ளங்காடு, குலத்தேரி ஆகிய கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சத்குருவின் படத்தை ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து ஆதியோகியின் சிலையின் முன்பாக மாலை 6.30 மணியளவில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.  இந்த கொண்டாட்டங்களில் சிங்கப்பதி, சர்கார் போரத்தி, நல்லூர்பதி, சந்தேகவுண்டன் பாளையம் ஊர்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

    ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில், மலைவாழ் மக்கள் அவர்களுக்கே உரிய மேளங்கள் முழங்க நடனமாடி கொண்டாட்டத்துடன் இந்த விழாவை நடத்தினர். இந்த ஊர்வல நிறைவை தொடர்ந்து ஆலந்துறை, தொண்டாமுத்தூர், அட்டுக்கள், சந்தேகவுண்டன் பாளையம், பூலுவாம்பட்டி மக்கள் ஒன்றிணைந்து இரவு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஈஷா யோகா மையத்தை சுற்றி இருந்த அனைத்து கிராம மற்றும் மலைவாழ் பகுதிகளும் நாள் முழுவதும் நிகழ்ந்த ஏராளமான நிகழ்ச்சிகளால்  விழா கோலம் பூண்டிருந்தது.

    • ஆதியோகி சிலை அமைப்பதற்கு அனுமதி கோரி நாங்கள் 2016-ம் ஆண்டே விண்ணப்பித்துவிட்டோம்.
    • 44 ஏக்கர் நிலம் ஈஷாவின் பெயரில் இருப்பதை நிரூபித்தால் இப்போதே அதை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம்.

    ஈஷாவுக்கு எதிரான பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிப்பதற்காக ஈஷா சார்பில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்ற ஈஷா யோக மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவையின் மிக முக்கிய ஆன்மீக அடையாளமாக விளங்கும் ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பொதுவாக, இதுபோன்ற சிலைகளை நிறுவுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். அந்த வகையில், ஆதியோகி சிலை அமைப்பதற்கு அனுமதி கோரி நாங்கள் 2016-ம் ஆண்டே விண்ணப்பித்துவிட்டோம்.

    எங்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் சிலை அமைப்பதற்கு 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், ஆதியோகி சிலை திறப்பை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்ற தவறான உள்நோக்கத்துடன் ஒரு அமைப்பு உயர்நீதிமன்றத்தில் ஈஷாவிற்கு எதிராக 2017-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கும் கடந்த மாதம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, எவ்வித அனுமதியும் இன்றி ஆதியோகி சிலை கட்டப்பட்டுள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது. அதுமட்டுமில்லாமல், இந்த விஷயத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஆதியோகி என்பது ஒரு சிலை; அது கட்டிடம் அல்ல. சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் தான் உள்ளது. DTCP-யின் அனுமதி வரம்பிற்குள் இது வராது. எனவே தான், DTCP தங்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.

    இதை நாங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளிடமும் எடுத்துரைத்துவிட்டோம். அதனால் தான் இந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு செல்லாமல் நிறைவு பெற்றுள்ளது. அத்துடன், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, எங்களிடம் உள்ள ஆவணங்களை நகரமைப்பு திட்டமிடல் துறையிடம் சமர்ப்பித்துவிட்டோம்" என்றார்.

    மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் நிலத்தை ஈஷா ஆக்கிரமித்துள்ளதாக பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும்போது, "ஈஷா யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. அவர்கள் குறிப்பிடும் 44 ஏக்கர் நிலம் ஈஷாவின் பெயரில் இருப்பதை நிரூபித்தால் இப்போதே அதை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம். இது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலில் அந்த 44 ஏக்கரில் ஈஷா எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

    யானை வழித்தடம் மற்றும் யானை வாழ்விடத்தை ஆக்கிரமித்து ஈஷாவின் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்கும்போது, ஈஷா யானை வழித்தடத்தில் இல்லை என்பதை நிரூபிக்கும் 5 வெவ்வேறு ஆதாரங்களை அவர் முன் வைத்தார்.

    தமிழக வனத்துறையின் RTI தகவல், தமிழக வனத்துறை அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அறிக்கை, இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (WWF) அறிக்கை மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் (WTI) ஆய்வு அறிக்கைகள் முறையே 2005 & 2017 ஆகிய அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட வேண்டிய யானை வழித்தடங்கள் குறித்தான ஆய்வு அறிக்கைகள் எதிலும் ஈஷா மையம் அமைந்துள்ள பகுதி வரவில்லை என்று ஆணித்தரமாக கூறினார்.

    இதுதவிர, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி, வனத்தை அழித்து ஆதியோகி சிலை கட்டப்பட்டதாக கூறப்படும் பொய் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்ற வெற்று அவதூறுகள் என்பதை நிரூபிக்கும் விதமாக அதற்குரிய ஆவணங்களையும், ஆதாரங்களையும் அவர் செய்தியாளர்களிடம் வழங்கினார்.

    • கிளெஸ்டர் அளவிலான போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
    • அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்வசம்' திருவிழாவின் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக.12) கோலாகலமாக தொடங்கியது.

    70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற கிளெஸ்டர் அளவிலான இப்போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு வீரர், வீராங்கணைகளாக கலந்து கொண்டனர். மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    இதேபோல், புதுச்சேரி கூடப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை புதுச்சேரி பொது விநியோகம் மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. சாய் சரவணக்குமார் அவர்களும், ஈரோட்டில் நடைபெற்ற த்ரோபால் போட்டியை பாஜக சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சரஸ்வதி அவர்களும் தொடங்கி வைத்தனர்.

     

    இதுதவிர, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கடலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள், கவுன்சிலர்கள், காவல் துறையினர் என பல தரப்பினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

    இந்த கிளெஸ்டர் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், தேர்வாகும் அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் டிவிஸினல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்.23-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    • போட்டிகளில் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • இறுதிப் போட்டிகள் ஆதியோகி முன்பு மிக பிரமாண்டமாக நடத்தப்படும்.

    கோவை:

    மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டு போட்டிகள் வரும் 12-ம் தேதி துவங்க உள்ளன. ஆதியோகி முன்பு பிரமாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இதில் 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி நகுஜா பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாக 'ஈஷா கிராமோத்சவம்' என்ற கிராமிய விளையாட்டு திருவிழாவை சத்குரு 2004-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். வெறும் 4 தாலுக்காவில் மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறும் அளவிற்கு பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

    இந்தாண்டு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நடைபெறும் இப்போட்டிகளில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 150 கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட அணிகளும், 2,600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இத்திருவிழாவில் ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால், இருபாலருக்குமான கபாடி போட்டிகள் என 4 போட்டிகள் பிரதானமாக நடத்தப்படும். பல்கலைக்கழக வீரர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் வீரர்கள், தொழில் முறை வீரர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.

    முழுக்க முழுக்க கிராமப்புற மக்களுக்காக இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 14 வயதை கண்ட கிராமப்புற மக்கள் தங்கள் கிராமத்தில் ஒரு அணியை உருவாக்கி இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

    ஆக.12-ம் தேதி தொடங்கி செப்.23-ம் தேதி வரை கிளெஸ்டர், டிவிஸினல், பைனல் என 3 கட்டங்களாக நடத்தப்படும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகைகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். இறுதிப் போட்டிகள் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ஆதியோகி முன்பு மிக பிரமாண்டமாக நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு வாலிபால் (ஆண்கள்) - ரூ.5 லட்சம், த்ரோபால் (பெண்கள்) - ரூ. 2 லட்சம், கபாடி (ஆண்கள்) - ரூ.5 லட்சம், கபாடி (பெண்கள்) - ரூ.2 லட்சம் பரிசு தொகைகள் வழங்கப்படும். மேலும், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அணியில் இடம்பெறாத மக்கள் பங்கேற்று மகிழ்வதற்காக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் https://isha.co/gramotsavam-tamil என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இத்திருவிழாவை நடத்தும் ஈஷா அவுட்ரீச் அமைப்பு, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையிடம் இருந்து தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு (National Sports Promotion Organization) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு 'ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்' என்ற உயரிய விருதை அப்போதைய மாண்புமிகு பாரத குடியரசு தலைவர், ஈஷா அவுட்ரீச்சிற்கு வழங்கி கெளரவித்துள்ளார். மேலும், இத்திருவிழாவின் இறுதிப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ், பி.வி.சிந்து, ஷிகர் தவான், வீரேந்திர சேவாக் போன்ற விளையாட்டு துறை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    • செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் சரோ தனராஜன் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
    • சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட CISCE (Counsil for Indian School Certificate Examinations) பள்ளிகளுக்கு இடையிலான 2013-ம் ஆண்டிற்கான மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் சத்குருவால் தொடங்கப்பட்ட ஈஷா ஹோம் ஸ்கூலில் சிறப்பாக நடைபெற்றன.

    இதில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டு போட்டிக்கான கொடியை ஏற்றி வைத்தார். செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் சரோ தனராஜன் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

    ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து 65 பள்ளிகள் மற்றும் 1,400 தடகள வீரர்கள் பங்கேற்றனர். வயதுகளின் அடிப்படையில் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் லே மார்கரேட் ராஜீவ் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் பிரிவில் தன்வந்த் ராஜா, ஐயன் அமன்னா, பிரச்சனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

    ஜூனியர் பெண்கள் பிரிவில் நெல்சி செர்லின் மற்றும் சாதனா ரவி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் ருத்ரேஷ் பாலாஜி தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    சீனியர் பெண்கள் பிரிவில் சஞ்சனா, சக்தி ராஜாராம் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் சவன் எஸ் ரெஜினால்ட் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்த விளையாட்டு போட்டிகளின் தரத்தை உறுதி செய்யும் விதமாக, கோவை மாவட்ட தடகள சங்கத்தின் தொழில்நுட்ப குழு தலைவர் ஸ்ரீநிவாசன் மற்றும் துணைத் தலைவர் சிவகுமார் ஆகியோரின் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக, போட்டியின் தொடக்க விழாவில் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் களரிப் பயட்டு போட்டியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    • ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் நிகழ்ச்சி இன்று திருச்சியில் நடைபெற்றது.
    • இதில் திருச்சி மேயர் அன்பழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

    திருச்சி:

    பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாகவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், 'பாரத பாரம்பரிய நெல் திருவிழா' என்ற விழாவை மண் காப்போம் இயக்கம் திருச்சியில் இன்று ஏற்பாடு செய்தது. எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    இதில் திருச்சி மேயர் அன்பழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் மால்முருகன், நிர்வாக மேலாளர் ஸ்ரீதேவி ஆகியோரும் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மேயர் அன்பழகன் பேசியதாவது:

    "விவசாயத்தை எப்படி பேணிக்காக்க வேண்டும், மண் வளத்தை எப்படி பேணிக்காக்க வேண்டும் என்று விளக்கிச் சொல்லும் நிகழ்ச்சியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் மிகவும் அவசியம். இயற்கை விவசாயம் செய்து மண் வளத்தை பாதுகாத்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கே விவசாயம்தான் அடிப்படை தேவையாக உள்ளது. இதை உணர்த்து வகையில் 'பாரத பாரம்பரிய நெல் திருவிழா'வை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள ஈஷாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

    இவ்விழாவில் சிறப்பு பேச்சாளராகப் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் திருமதி. மேனகா பேசுகையில், "நான் 13 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகிறேன். நான் தொழில் தொடங்கும் சமயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் பயன்கள் குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லை. ஆனால், இப்போது இது குறித்த விழிப்புணர்வு பெரிய அளவு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக, கொரோனா பாதிப்பிற்கு பிறகு மக்கள் ஆரோக்கியத்திற்காக அதிகம் முதலீடு செய்ய தொடங்கி உள்ளார்கள். சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ பயன்கள் குறித்து மக்கள் யூ-டியூப்பில் அதிகம் தேடி தெரிந்து கொள்கிறார்கள். இது மக்களுக்கு மட்டுமின்றி, அதை விளைவிக்கும் விவசாயிக்கும் நன்மை அளிக்கிறது..

    என்னுடைய மண் வாசனை நிறுவனத்தின் மூலம் 200-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறேன். அதில் கருப்பு கவுனி மற்றும் பனங்கற்கண்டு பாலுடன் சேர்த்து தயாரிக்கும் ஐஸ்கிரீம் மிக பிரபலமாகிவிட்டது. இந்தியாவில் பாரம்பரிய அரிசியை மூலப்பொருளாக கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஒரே நிறுவனம் நாங்களாக தான் இருப்போம். சென்னையில் திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஆர்டர் எடுத்து கருப்பு கவுனி ஐஸ்கிரீமை விற்பனை செய்கிறோம். இதேபோல், ஒவ்வொரு விவசாயியும் மக்களின் தேவை அறிந்து பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்பு கூட்டி விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்" என கூறினார்.

    மதுரையைச் சேர்ந்த தான்யாஸ் என்ற இயற்கை உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் மணி பேசுகையில், "விவசாயிகள் நெல்லாகவோ, அரிசியாகவோ வைத்து இருந்தால் அதை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. ஆனால், அதை சத்து மாவாகவோ அல்லது வேறு வகையான மதிப்பு கூட்டுதல் பொருளாக மாற்றினால் நீண்ட காலம் வைத்து விற்பனை செய்ய முடியும். இதனால், கெட்டுப் போய்விடும் என்ற பயத்தில் குறைந்த விலைக்கு உடனே விற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

    நெல்லாக விற்காமல் அரிசியாக விற்றால் அதில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதை தாண்டி தோசை மிக்ஸ், பொங்கல் மிக்ஸ், சத்து மாவு போன்ற வகைகளில் நன்கு பேக்கிங் செய்தால் அதைவிட கூடுதல் லாபம் கிடைக்கும்" என்றார்.

    இதேபோல் முன்னோடி பாரம்பரிய நெல் விவசாயி விஜய் மகேஷ் பேசுகையில், "இயற்கை விவசாயத்தில் லாபம் எடுக்க வேண்டுமென்றால், இயற்கை இடுபொருட்களை தாங்கள் சரியான சமயத்தில் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வேறு யாரிடமும் இடுபொருட்களை கடன் கேட்கும் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்" என்றார்.

    இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி நெல் விவசாயிகளும் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். பிரபல பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் 'பூச்சி மேலாண்மை' குறித்து, உணவு மருத்துவ நிபுணர் ஹீலர் சக்திவேல் பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள் குறித்தும் பேசினர்.

    மேலும், நடவு முதல் அறுவடை வரை விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சி, பாரம்பரிய விதைகள் கண்காட்சி உட்பட பல்வேறு அம்சங்கள் விவசாயிகளை கவர்ந்தன. வேளாண் கருவிகளை கண்டறிந்த விவசாயிகளுக்கு மண் காப்போம் இயக்கம் சார்பில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

    • நல்வாழ்விற்கான உள்நிலை தொழில்நுட்பங்களை சத்குரு பகிர்ந்து கொண்டார்.
    • ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ‘யோக அறிவியல்’ என்ற தலைப்பில் ஒரு அமர்வை நடத்தினர்.

    "நாம் ஆனந்தமான, அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களாக நம்மை உருவாக்கி கொள்வது, அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்கும் நம்முடைய முயற்சியில் ஒரு முக்கிய படியாகும்" என ஈஷாவில் நடைபெற்ற G20 - S20 மாநாட்டில் சத்குரு கூறினார்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் G-20 சந்திப்புகளின் ஒரு அங்கமாக, கோவை ஈஷா யோகா மையத்தில் S-20 என்ற பெயரில் 100-க்கு மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அறிவியல் மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் 20 நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடும் சிறப்பு அமர்வும் நடைபெற்றது. இந்த அமர்வில் நல்வாழ்விற்கான உள்நிலை தொழில்நுட்பங்களை சத்குரு பகிர்ந்து கொண்டார்.

    2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 'தி ராயல் சொசைட்டி - இங்கிலாந்து', 'தேசிய அறிவியல் அகாடமி - அமெரிக்கா', 'சர்வதேச அறிவியல் கவுன்சில் - பிரான்ஸ், 'ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் - ஸ்விட்சர்லாந்து', 'இந்திய தேசிய அறிவியல் அகாடமி' உள்ளிட்ட உலகின் மிக முக்கியமான அறிவியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பசுமையான எதிர்காலத்திற்கான தூய எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் அறிவியல் இணைப்பது ஆகிய மூன்று தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நிகழ்த்தினர்.

    இக்கூட்டத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் பங்கேற்றார். அவர் ஆன்மீக மையத்தில் அறிவியல் மாநாடு நடத்துவது பற்றிய தனது கருத்தை கூறும் போது, "சுவாரஸ்மற்ற பழைய முறையிலான வரட்டுதனமான அறிவியலுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை இருக்கிறது என்பதை தற்போது பலர் உணர்ந்து கொண்டுள்ளனர். பொதுவாக, வாழ்க்கையை அறிவியலை அணுகுவது போன்ற குறுகிய கண்ணோட்டத்துடன் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையை புரிந்துகொள்ள அதிக விசாலமான பார்வை தேவை. அத்தகைய பார்வையை கொண்டுள்ள ஈஷா யோக மையத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவது சிறப்பானது" என கூறினார்.

    சர்வதேச பிரதிநிதிகள் ஈஷாவில் தங்கியிருந்த அனுபவங்கள் குறித்து S-20 மாநாட்டின் தலைவர் அசுதோஷ் சர்மா கூறுகையில், "நியூயார்க்கில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலோ அல்லது மும்பை, டில்லியில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலோ ஒரு மாநாட்டை நடத்தினால் அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால், ஈஷா யோக மையத்தை போன்ற ஒரு இடத்தில் S-20 மாநாட்டை நடத்துவது இந்தியா குறித்த புதிய பார்வையையும், அனுபவத்தையும் அளிக்கிறது" என S-20 மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச பிரதிநிதி ஒருவர் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக கூறினார். 

    கலைநிகழ்ச்சி

    கலைநிகழ்ச்சி

    இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் நாகராஜ் நாயுடு கூறுகையில், "அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டின் நோக்கமும் நம்முள் இருக்கும் கேள்விகளுக்கு விடைகளை கண்டறிவது தான். அறிவியல் உலகத்தை புரிந்து கொள்வதை நோக்கமாகவும். ஆன்மீகம் உண்மையை புரிந்து கொள்வதை நோக்கமாகவும் கொண்டுள்ளது. இரண்டிற்குமான பயன்பாடுகளும், நடைமுறைகளும் கொஞ்சம் வேறுபட்டு இருந்தாலும், இரண்டும் ஒரு விதத்தில் ஒரே மாதிரியான வழிமுறையை பின்பற்றுகின்றன. அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டும் மனித குலத்தை மேம்படுத்தும் பணியை தான் செய்கின்றன." என கூறினார்.

    மாநாட்டின் ஒரு பகுதியாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் 'யோக அறிவியல்' என்ற தலைப்பில் ஒரு அமர்வை நடத்தினர். அதில் ஈஷாவில் கற்றுக்கொடுக்கப்படும், ஈஷா க்ரியா, சூன்யா, சம்யமா போன்ற தியானங்களை செய்வதால் ஏற்படும் பலன்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் பற்றி பேசினார்.

    முன்னதாக, மாநாட்டிற்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளை ஈஷா யோக மையத்தின் தன்னார்வலர்கள் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் களரி பயட்டு மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சி சர்வதேச பிரதிநிதிகளை வெகுவாக கவர்ந்தது.

    • G20 பிரதிநிதிகளின் 2 நாள் சந்திப்பில் யோக அறிவியல் குறித்த கல்வி அமர்வும் இடம்பெற உள்ளது.
    • முந்தைய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொகுத்து கலந்துரையாட உள்ளனர்.

    கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் G20 சந்திப்புகளின் ஒரு அங்கமாக விளங்கும் S20 என்ற அறிவியல் மாநாடு (Science 20 Meet) கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள், சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் சத்குரு உடனான சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளனர்.

    S20 குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் பசுமை எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூகத்துடன் அறிவியலை இணைப்பது போன்ற தலைப்புகளில் ஏற்கனவே மூன்று கூட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஈஷாவில் நடக்கும் கூட்டத்தில் முந்தைய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொகுத்து அதுகுறித்து கலந்துரையாட உள்ளனர்.

    ஈஷாவில் S20 மாநாடு நடக்க இருப்பது தொடர்பாக சத்குரு கூறுகையில், "G20 கூட்டங்கள் ஆன்மீக மையம் உட்பட பல்வேறு விதமான இடங்களில் நடத்தப்படுவது மிகவும் சிறப்புக்குரியது. பாரதத்தை உணர்வதற்கு இது சிறந்த வழியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

    G20 பிரதிநிதிகளின் 2 நாள் சந்திப்பில் யோக அறிவியல் குறித்த கல்வி அமர்வும் இடம்பெற உள்ளது. இந்த அமர்வை ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும், விழிப்புணர்வான உலகிற்கான சத்குரு மையத்தின் (Sadhguru Center for a Conscious planet) இயக்குநருமான டாக்டர் பாலசுப்பிரமணியம் நடத்த உள்ளார்.

    மேலும், சர்வதேச பிரதிநிதிகள் ஈஷாவில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களான தியானலிங்கம், லிங்கபைரவி, தீர்த்த குண்டங்கள் ஆகிய இடங்களுக்கும் செல்ல உள்ளனர். சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள் களரிப் பயட்டு மற்றும் பரத நாட்டியத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்ற உள்ளனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகள் இன்று காலை முதலே ஈஷாவிற்கு வருகை தர தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற தொன்மையான சக்திவாய்ந்த தியானம் கற்றுக்கொடுக்கப்படும்.
    • இப்பயிற்சியை தினமும் செய்வதன் மூலம் மனம் குவிப்புத்திறன் அதிகரிக்கும்.

    மன அழுத்தம் உள்ளிட்ட உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் 7 நாள் ஈஷா யோகா வகுப்பு கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

    இவ்வகுப்பு ஜூலை 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை காந்திபுரம், பீளமேடு, ஆர். எஸ் புரம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவில்பாளையம், சிங்காநல்லூர், செல்வபுரம், மற்றும் சோமனூரில் ஆகிய இடங்களில் நடைபெறும்.

    தினமும் இரண்டரை மணி நேர நடைபெறும் இவ்வகுப்பில் 'ஷாம்பவி மஹாமுத்ரா' என்ற தொன்மையான சக்திவாய்ந்த தியானம் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியை தினமும் செய்வதன் மூலம் மனம் குவிப்புத்திறன் அதிகரிக்கும், மனதில் தெளிவு ஏற்படும், உணர்வில் சமநிலை உருவாகும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    கூடுதல் விபரங்களுக்கு: 8300052000 / 9486894868 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

    • சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.
    • ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் புதுக்கோட்டையில் நாளை (ஜூலை 16) நடத்தும் மாபெரும் விவசாய கருத்தரங்கை மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. மெர்சி ரம்யா அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார்.

    காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் நாளை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கூறியதாவது:

    இக்கருத்தரங்கில் சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற பயிர்களை வெற்றிகரமாக பயிர் செய்துள்ள விவசாயிகளும், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன் ஆகியோர் கலந்து கொண்டு சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.

    இக்கருத்தரங்கு சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வன் அவர்களது மிளகுத் தோட்டத்தில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மிளகு சாகுபடி செய்து வரும் இவர், தேக்கு, பலா, கிளைரிசிடியா, செங்கல் தூண் மற்றும் இரும்பு வலைகளிலும் மிளகு வளர்த்து வருகிறார். இரண்டு ஏக்கரில் மிளகு சாகுபடி செய்து வருடத்திற்கு நான்கு லட்சம் லாபம் ஈட்டுகிறார்.

    மரப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர் வருமானம் பெறும் வழிமுறைகளை காவேரி கூக்குரல் இயக்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. மரப்பயிர்களில் ஊடுபயிராக காய்கறிகள், சிறுதானியங்கள், நறுமணப்பயிர்கள் மற்றும் கிழங்கு வகைகளை பல விவசாயிகள் செய்து வருகிறார்கள்.

    இதனால் மரப்பயிர்களின் அறுவடை வரை வருமானத்திற்கு காத்திருக்காமல் ஊடுபயிர்கள் மூலமே தொடர் வருமானம் பெறுகிறார்கள். பெரும்பாலான நறுமணப் பயிர்கள் மரங்களுக்கு கீழே குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரக்கூடியதாக உள்ளதால் சரியான சூழ்நிலையை உருவாக்கி மர விவசாயிகள் அதிக வருமானம் பெற இயலும்.

    ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது மற்ற நறுமணப்பயிர்களும் சமவெளியில் நன்கு வளர்வதால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சியை காவேரி கூக்குரல் நடத்துகிறது.

    விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்து அறிந்துகொண்டு, சாகுபடி செய்வதன் மூலம் அவர்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ளமுடியும். பயிற்சியில் கலந்து கொள்ள 94425 90079 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வன் அவர்களது மிளகுத் தோட்டத்தில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
    • ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது.

    சென்னை:

    காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு வரும் ஜூலை 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஜூலை 14) நடந்தது. இதில் பங்கேற்ற காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியதாவது:

    இக்கருத்தரங்கில் சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற பயிர்களை வெற்றிகரமாக பயிர் செய்துள்ள விவசாயிகளும், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR – IISR) சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன் ஆகியோர் கலந்து கொண்டு சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.

    இக்கருத்தரங்கு சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வன் அவர்களது மிளகுத் தோட்டத்தில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மிளகு சாகுபடி செய்து வரும் இவர், தேக்கு, பலா, கிளைரிசிடியா, செங்கல் தூண் மற்றும் இரும்பு வலைகளிலும் மிளகு வளர்த்து வருகிறார். இரண்டு ஏக்கரில் மிளகு சாகுபடி செய்து வருடத்திற்கு நான்கு லட்சம் லாபம் ஈட்டுகிறார்.

    மரப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர் வருமானம் பெறும் வழிமுறைகளை காவேரி கூக்குரல் இயக்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. மரப்பயிர்களில் ஊடுபயிராக காய்கறிகள், சிறுதானியங்கள், நறுமணப்பயிர்கள் மற்றும் கிழங்கு வகைகளை பல விவசாயிகள் செய்து வருகிறார்கள்.

    இதனால் மரப்பயிர்களின் அறுவடை வரை வருமானத்திற்கு காத்திருக்காமல் ஊடுபயிர்கள் மூலமே தொடர் வருமானம் பெறுகிறார்கள். பெரும்பாலான நறுமணப் பயிர்கள் மரங்களுக்கு கீழே குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரக்கூடியதாக உள்ளதால் சரியான சூழ்நிலையை உருவாக்கி மர விவசாயிகள் அதிக வருமானம் பெற இயலும்.

    ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது மற்ற நறுமணப்பயிர்களும் சமவெளியில் நன்கு வளர்வதால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சியை காவேரி கூக்குரல் நடத்துகிறது.

    விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்து அறிந்துகொண்டு, சாகுபடி செய்வதன் மூலம் அவர்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ளமுடியும். பயிற்சியில் கலந்து கொள்ள 94425 90079 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவசாயிகள் வள்ளுவன் மற்றும் திருமலை ஆகியோர் பங்கேற்றனர். கடலூரைச் சேர்ந்த விவசாயி திருமலை அவரது தோட்டத்தில் கடந்த 15 வருடங்களாக மிளகு சாகுபடி செய்கிறார். டிம்பர் மரங்கள், தென்னை, கிளைரிசிடியா, பனை மற்றும் முந்திரி மரங்களிலும் மிளகு வளர்த்துள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்த வள்ளுவன் தென்னை மரங்களுக்கிடையே ஜாதிக்காய் நடவுசெய்து வெற்றிகரமாக வருமானம் ஈட்டிவருகிறார். இவர் 6 வருடங்களுக்கு முன் ஈஷா நடத்திய மிளகு சாகுபடி பயிற்சியில் கலந்து கொண்டபின் மிளகு நட்டு தற்போது வெற்றிகரமாக மிளகு அறுவடை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×