search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in Toll Fees"

    • கூட்டத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா, தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பி னருமான மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக தொடங்கப்பட்டது தான் தி.மு.க. வட இந்தியாவில் நிறைய பகுதிகள் இன்னும் முன்னேறாமல் உள்ளன. அங்கு இன்னும் பெண்களுக்கு, ஆதிதிராவி டர்களுக்கு கல்வி கிடையாது என்ற நிலை உள்ளது.

    மதத்துக்கு எதிரான கட்சி தி.மு.க. என குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. தற்போது சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். சமையல் எரிவாயு விலை ரூ.450-ல் இருந்து ரூ.1200 என உயர்த்தி விட்டனர். இந்த விலையை குறைக்க வேண்டுமென மக்கள் எங்களிடம் கேட்கின்றனர். இதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதி களில் 85 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளார். தி.மு.க.வில் அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அனைவரும் இணைந்து செயல்படும் போது நிச்சயம் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர் வேலுச்சாமி ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஏ.சி.ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், செல்வராஜ், மும்மூர்த்தி, காசிவிஸ்வ நாதன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துகரும்புலி, வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி செண்பக ராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட உள்ளாட்சி பிரதிநிதி கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×