search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC duckworth lewis Rules"

    டக்வொர்த் லீவிஸ் மற்றும் வீரர்கள் நன்னடத்தை விதிகளில் கொண்டு வந்துள்ள ஐசிசி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது. #ICC
    டக்வொர்த் லீவிஸ் மற்றும் வீரர்களின் நடத்தை விதிமுறைகளில் சர்வதேச கிரிக்கெட் கவுசிலிங் (ஐசிசி) கொண்டு வந்துள்ள மாற்றம் இன்று முதல் அமலாகிறது. டக்வொர்த் லீவிஸ் ஸ்டெர்ன் (டி.எல்.எஸ்) விதிமுறையில் கடந்த 2014-ம் ஆண்டு புதிய மேம்பாட்டு திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது.

    இது கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற 700 ஒருநாள் போட்டி மற்றும் 428 இருபது ஓவர் போட்டிகளில் வீசப்பட்ட 2,40,000-க்கும் மேலான பந்துகள் கருத்தில் கொள்ளப்பட்டது. இதில் பவர்பிளே உள்பட அனைத்து பந்துகளிலும் எடுக்கப்படும் ரன் விகிதத்தை ஆய்வு செய்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின் மூலம் அணிகள் தங்களது ரன் குவிக்கும் வேகங்களை அதிகரித்துள்ளன. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டின் சராசரி ரன்கள் உயர்ந்துள்ளன. இதன் மூலம் இன்னிங்சின் கடைசி கட்டத்தில் அதிகரித்துள்ள ரன் குவிப்பு விகித அதிகரிப்பையும் இந்த புதிய திருத்தம் உள்ளடக்கும்.



    ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் என இரண்டுக்கும் திருத்தம் செய்யப்பட்ட ஒரே டக்வொர்த் லீவிஸ் ஸ்டெர்ன் விதிமுறை பொருந்தும்.

    வீரர்கள் நடத்தை விதி மீறலில் 3 நிலை குற்றத்துக்கு விதிக்கப்படும் அதிகபட்ச இடை நீக்கப்புள்ளிகள் 8-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை). இந்த புதிய மாற்றங்கள் தென் ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து அமலுக்கு வருகிறது.
    ×