search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu god"

    எல்லோருக்குள்ளும் கடவுள் இருக்கிறான் எனினும் யாருமே தமக்குள் இருக்கும் கடவுளைக் காண இயலாது. இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில் தருகிறார் திருமூலர்.
    இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில் தருகிறார் திருமூலர்.

    ஒரே மண்ணிலிருந்து பல பாண்டங்கள் செய்தாற் போன்று கடவுள் எனும் ஒரே மூலம் பல மனிதப் பிறவிகளாய்ப் பிறக்கின்றன. பாண்டங்கள் உடைந்தால் மீண்டும் மண்ணாகிப் பூமியில் இரண்டறக் கலப்பது போல மனிதர்களின் உடல்களும் கலக்கின்றன. (Law of Conservation of Mass) உயிர்கள் இறைவனுடன் கலக்கின்றன.(Law of Conservation of Energy) எங்கிருந்து வந்தனவோ அங்கேயே திரும்பப் போகும் பாண்டங்கள் போலவேதான் நாமும்.

    பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது, பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான், ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை.

    கண்ணானது யாவற்றையும் பார்க்கிறது என்றாலும் அது என்றுமே தன்னைப் பார்த்ததில்லை. பார்க்கவும் இயலாது. எல்லோருக்குள்ளும் கடவுள் இருக்கிறான் எனினும் யாருமே தத்தமக்குள் இருக்கும் கடவுளைக் காண இயலாது. கண் இருப்பதை உணர முடிந்தது போல் உணர வேண்டுமானால் செய்யலாம்.
    இப்படிக் கடவுள் இருந்தவாறு தன்னை மறைப்பது அவனது நான்கு தொழில்களில் ஒன்றாகும். (படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல்)


    இவ்வளவு செய்திகளையும் தன்னில் அடக்கிய அந்த அருமையான திருமந்திரப் பாடல் இதோ:

    மண்ஒன்று தான்பல நற்கலம் ஆயிடும்
    உண்ணின்ற யோனிகள் எல்லாம் ஒருவனே
    கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
    அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின் றானே

    நம்மால் உருவகப்படுத்தி வணங்கப்படும் தெய்வங்களை, எல்லா நேரங்களும் நாம் வழிபட முடியாது. தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களில் வழிபட்டால், அந்த வழிபாடு பயனற்றதாகி விடுகிறது.
    மன அமைதி வேண்டியும், இந்த உலகில் நல்வாழ்வு வாழ நமக்கு மேல் இருக்கும் சக்தியை வணங்கி நல்லாசிகள் பெறவும், நாம் ஆலயங்களுக்குச் செல்கிறோம்.

    நம்மால் உருவகப்படுத்தி வணங்கப்படும் தெய்வங்களை, எல்லா நேரங்களும் நாம் வழிபட முடியாது. தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களில் வழிபட்டால், அந்த வழிபாடு பயனற்றதாகி விடுகிறது.

    தவிர்க்கப்பட வேண்டிய நேரங்கள்: விழாக்காலங்களில் சுவாமி புறப்பட்டு வீதியுலா வரும்போது மூலவரை வணங்குவதை தவிர்க்கவேண்டும். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்போதும், பிரசாதம் படைக்க திரையிட்டிருக்கும் போதும் சுவாமியை வணங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

    இந்து வழிபாட்டில் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இறைவனை வணங்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
    பிரம்மா, விஷ்னு, சிவன் இம்மூவரை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும். குருவை வணங்கும் போது, நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசரையும், தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.

    பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும். மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள், மாதா, பிதா, குரு, தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது!

    இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு முறையில் வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    * பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் கைகளை உயர்த்தி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகளைக் குவித்து வணங்கினாலே போதுமானது.

    * குருவை வணங்கும் போது, நெற்றிக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

    * தந்தையை வணங்கும் போது, வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

    * தாயை வணங்கும் போது, வயிற்றிற்கு நேராக கை வைத்து வணங்க வேண்டும்.

    * மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது, ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல் முறையாகும். அதே போல் பெண்கள் மேற்கண்டவர்களை வணங்கும்போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். 
    ×