search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Highways Tenders Scam"

    சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். ஆனால், அதற்கு அவசியம் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #Vaiko #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளதை மதிமுக சார்பில் வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்  வைகோ கூறியுள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    ‘நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

    ஆனால், ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதேசமயம், முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  #HighwaysTendersScam #EdappadiPalaniswami #Vaiko #TamilisaiSoundararajan
    ×