search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl escaped"

    மதுரையில் மாயமான வாலிபர் காதலியை அழைத்து சென்று இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மதுரை:

    சிந்தாமணி அருகே உள்ள கீழ்மதுரையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது25). இவர் கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முத்துக்குமார் தனது உறவு பெண் மலர்விழி என்பவருடன் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்குள் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலிபர் மற்றும் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×