search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaja Rains"

    கஜா புயலால் நாகை கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. #GajaCyclone #Gaja

    சென்னைக்கு அருகே சுமார் 290 கி.மீ. நாகைக்கு அருகே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று இரவு 8 மணிமுதல் 11 மணிக்குள் பாம்பன் - கடலூர் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஏழு மாவட்டங்களில் வேலைப்பார்க்கும் பணியாளர்களை மாலை நான்கு மணிக்குள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம், செல்பி எடுக்க வேண்டாம் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



    இந்நிலையில் ஏழு மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் எனவும், இந்த மழை 16-ந்தேதி வரை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. #GajaCyclone #Gaja
    கஜா புயல் கரையை கடப்பதால் இன்று காலை சுமார் 11 மணியில் இருந்து சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மிதமான மழை பரவலாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #CycloneGaja #TNRains
    சென்னை:

    கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    சென்னைக்கு அருகே 370 கி.மீ., நாகைக்கு அருகே 370 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் கரையை கடப்பதன் எதிரொலியாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில்  இன்று காலை சுமார் 11 மணியில் இருந்து மிதமான மழை பரவலாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதற்கேற்ப இன்று அதிகாலை மத்திய சென்னை, தென் சென்னை வட சென்னைக்குட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. காலை சுமார் 9 மணியில் இருந்து சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. #CycloneGaja #TNRains 
    ×