search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "function"

    • காவல்துறையில் பணியாற்ற அதிகளவில் பெண்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. அழைப்பு
    • உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது

    குன்னம்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெற்றி பெற்ற பெண்கள் என்ற தலைப்பில் பெண் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். கல்லூரி, மாணவிகளிடம் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் பேசினார். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது பெண்கள், பணிபுரியாத துறைகளே இல்லை என்றே கூறலாம். மேலும் அவர்கள் அத்துறைகளில் பல சாதனைகளும் செய்து வருகின்றனர். இன்றைய பெண்கள், மன தைரியத்துடனும் மன வலிமையுடனும், தங்களது துறைகளிளோ அல்லது வாழ்க்கையிலோ உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள முன்வர வேண்டும். கல்லூரி மாணவிகள் காவல்துறையில் சேர்ந்து அதிகம் அளவில் பணியாற்ற முன் வர வேண்டும். அவ்வாது பணியாற்ற முன்வரும் பெண்களுக்கு வழி காட்டுதல் நிகழ்ச்சியும் நடத்தப்படும். கல்லூரி மாணவிகள் அவர்களின் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இலவச உதவி எண்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.

    • கொன்னையூர் முத்து மாரியம்மன்கேயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்செரிதல் விழா நடைபெற்றது
    • பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    பொன்னமராவதி

    பொன்னமராவதி அருகே உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா தொடங்கியது. விழாவின் துவக்கமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் பால்குடம்,பூத்தட்டு எடுத்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி வெகு விமர்சையாக நடைபெறும். இன்றிலிருந்து திருவிழா கலைகட்ட தொடங்கியது. விழாவின் துவக்கமாக பூச்சொரிதல் விழா இதனை முன்னிட்டு பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும்பால்குடம் பூத்தட்டு போன்றவற்றை தங்களது பகுதியில் இருந்து எடுத்துச் சென்று அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருக்கும் பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இவ்விழாவையும் ஒட்டி கோவிலை சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் பாதுகாப்பு பணிகளும் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.கோவில்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் வந்து செல்லும் வண்ணம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணியிடமிருந்தும் காரைக்குடி போக்குவரத்து பணிமனையில் இருந்தும் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு அதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்ற வன்னமாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை கோவிலின் முன்பாக அக்னி காவடி நடைபெற உள்ளது.




    • அன்னதானத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
    • பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்

    புதுக்கோட்டை

    திருவப்பூர்முத்துமாரியம்மன் திருவிழா பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி உள்ளிட்டவைகளை தலையில் சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக ஆயிரக்கணக்கான நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. பானக்கம், கஞ்சி , நீர் மோர், பழங்கள் மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்கோகர்ணம் இல்லத்தில் நடந்த அன்னதானத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
    • பஸ் ஸ்டாப் திறந்து வைத்தபின்னர் அளித்த பேட்டியில் மருத்துவ கல்லூரி கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குன்னம் பேருந்து நிறுத்த புதிய கட்டடம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் ஆகியவற்றையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார்.விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொ ய்யாமொழி,மாவட்ட ஆட்சியர் க.கற்பகம்,சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் ,சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி,  கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏழு வகையான கலவை சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    • கண்ணாடி வளையல், பட்டுசேலை, நெத்திசூடி அணிவித்து அழகு பார்த்து மகிழ்ந்தனர்

    கரூர்

    கரூர் வாங்கல் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தில் நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் கோசலையில் உள்ள பசுவிற்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி கோவில் பசுவிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, பட்டு சேலையை கட்டிவிடப்பட்டனர். மேலும் நெத்திச்சூடி அணிவித்து, பசுவின் வாலில் பூக்களால் பின்னி அலங்கரிக்கப்பட்டன. இவ்விழாவில் இனிப்பான தின்பண்டங்களை உணவாக பசுவிற்கு பெண்கள் வழங்கினர். ஒரு பெண்ணிற்கு எந்தவகையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறதோ அதைபோல கோவில் பசுவிற்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி பெண்கள் அழகு பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நவநீதகிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு ஏழு வகையான கலவை சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • தொழிற் சங்க 4-ம் ஆண்டு தொடக்க விழா
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூரில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் தொழிற்சங்க 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர்,பொருளாளர், செயற்குழு உறுப்பினர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஆன்லைன் மூலம் சவாரிக்கு ஆட்டோ, டாக்ஸி முன்பதிவு செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். இரு சக்கர வாகன வாடகை முறையை ரத்து ெ சய்ய வேண்டும். சொந்த வாகனத்தை வாடகைக்கு விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 3 நாட்கள் யாகசாலை நடைபெற்ற பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அறந்தாங்கி, 

    ஆவுடையார்கோவில் தாலுகா பில்லுவலசை கிராமத்தில் முத்துமாரியம்மன் ேகாவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததையொட்டி கும்பாகிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. விழா தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித ர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சார்யார்கள் புனித நீரினை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து ராமானுஜம் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை கலந்து கொள்வதற்காக பில்லுவலசை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். கும்பாகிஷேகத்திற்கு பின்னர் அவர்கள் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    வாராப்பூர்மா மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூரில் பூரணபுஷ்கலா உடனுறை பெரிய அய்யனார், பாலையடி கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது.இந்த கோயிலில் மாசி மக திருவிழா கடந்த 3ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மண்டகப்படி நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மனித ரத்தம் கலந்து சோறு பிசைந்து, பில்லி எறியும் வினோத திருவிழா நடைபெற்றது.பாரம்பரியமாகஉள்ள வழக்கப்படி ஒரு சிறுவன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த வேஷ்டி குகையால் மறைக்கப்பட்ட மறைவில் அமரவைக்கப்பட்டிருந்த நிலையில் பூசாரிகளில் ஒருவர் அந்த சிறுவனின் கழுத்தை அறுப்பதுபோல் செய்துவிட்டு, தனது தொடையை கீறி அதில் இருந்து வந்த ரத்தத்தை அங்கு தயாராக இருந்த சோற்றில் கலந்து பிசைந்து வைத்தார்.பின்னர் சுமார் 20-க்கும் மேற்பட்ட கோயில் பூசாரிகள் இந்த பில்லி சோற்றை எடுத்துக்கொண்டு காட்டு பகுதிக்கு ஓடிச்சென்று வானத்தைநோக்கி 4 திசைகளிலும் வீசினர். இந்த பில்லி எரியும் வினோத நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவினை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் வாராப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அன்னதானமும், நீர் மோர் பந்தலும் அமைக்கப் பட்டிருந்தது. செம்பட்டி விடுதி போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்இன்று கிடாய் வெட்டு பூஜை களும் மற்றும் நாளை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    • ஆடுகளின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடித்தார்
    • திருச்சி புத்தூர் மந்தையில் குவிந்த பக்தர்கள்

    திருச்சி,

    உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறுகண் பாலம் (தற்போது தொட்டி பாலம்) அருகில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி மாநகர மக்களின் காவல் தெய்வமாகவும், கருணை மழை பொழியும் அம்மனாகவும் திகழ்ந்து வருகிறார்.பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குட்டி குடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் திருச்சி மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள். அதே போல் பல்வேறு மாநிலங்க ளில் பிழைப்புக்காக சென்றவர்களும் மறக்காமல் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.இந்தாண்டுக்கான குட்டிக்குடி திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 6-ந்தேதி இரவு மறு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தெடர்ந்து காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அம்மனை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர்.முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு தன்னக்காடு, வண்ணாரப்பேட்டை, அரசு மருத்துவமனை வழியாக புத்தூர் நால்ரோட்டை சென்றடைந்தது. பின்னர் புத்தூர் மந்தைக்கு நள்ளிரவு 2 மணிக்கு வந்தடைந்தார். அதன்பின் பின்னர் அதிகாலை 5 மணிக்கு அம்மன் சுத்த பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் எழுந்தருளிய தேர்பவனி நடைபெற்றது. தேர் உறையூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை தட்டுகளுடன் சாமி தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று (9-ந்தேதி, வியாழக்கிழமை) புத்தூர் மந்தையில் தொடங்கி நடந்தது. மருளாளி சாமி ஆடியபடி மரியாதையுடன் புத்தூர் மந்தைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பாரம்பரியமிக்க கொம்பு உள்ளிட்ட வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 2 பக்தர்களின் தோள் மீது அமர்ந்தபடி மரு ளாளியை பக்தர்கள் ஊர் வலமாக தூக்கி கொண்டு வந்தனர். அதன் பின்னர் முதல் மரியாதையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்டுக்கிடா வழங்கப்பட்டது.

    அதனை கடித்து மருளாளி ரத்தத்தை உறிஞ்சி குடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் கொண்டு வந்த கருப்பு கிடாய் ஆட்டு குட்டிகளை அருள் வந்த ஆடிய மருளாளிக்கு தந்தனர். இவ்வாறு பொதுமக்கள் நேர்த்திக்கடனாக அளித்த ஆயிரக்கணக்கான ஆடுகளின் ரத்தங்களை மருளாளி உறிஞ்சி குடித்து, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

    இதனை தொடர்ந்து நாளை (10-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் 11-ந்தேதி சாமி குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. குட்டி குடி திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவிழாவின் காரணமாக அப்பகுதியில் ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து பானகம், நீர்மோர், சர்பத் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் பல இடங்களில் அன்னதானமும் நடைபெற்றது.

    • கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
    • மகளிர் போலீசார் புத்தாடை உடுத்தி கலந்து கொண்டனர்

    ஆலங்குடி, 

    ஆலங்குடி காவல் நிலையத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொள்ள ஆலங்குடி மற்றும் செம்பட்டிவிடுதி காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசார் அனைவரும் வந்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பெண் போலீசார் அனைவரும் புத்தாடை அணிந்து வந்திருந்தனர். மகளிர் போலீசார் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டினர். சப் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வன், லதா, நதியா, மற்றும் மாவட்ட எஸ்பி. தனிப்பிரிவு வெங்கடேஷ், மற்றும் மணிரெத்தினம் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது.  

    • ஆலங்குடி அருகே குளமங்கலம் அய்யனார் கோவில் நடைபெற்றது
    • ஜொலி, ஜொலிக்கும் வர்ண விளக்குகளில் வலம் வந்த தெப்பத்தை கண்டு பக்தர்கள் பரவசம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசி மகத் திருவிழா தொடங்கியது.குளமங்கலம் பெருங்காயைடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக நாளில் நடைபெறும் திருவிழாவில்கோவில் முன்பு உள்ள 33 அடி உயரமுள்ள குதிரை சிலைக்கு அதன் உயரத்திலேயே பொதுமக்கள் பூ மற்றும் காகித மாலைகளை அணிவித்து வழிபடுவது வழக்கம்.நடப்பாண்டு விழாவைெயாட்டி கிராம மக்களின் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து குதிரை சிலைக்காக தயாரிக்கப்பட்ட நீளமான வேட்டி, துண்டு, பச்சை நிற வஸ்திரம் ஆகியற்றை கயிறு மூலம் கட்டி குதிரை சிலைக்கு அணிவித்தனர்.தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், வேன், சுமை ஆட்டோ, லாரி, டிராக்டர்களில் பூ மற்றும் காகித மாலைகளை எடுத்து வந்து, கோவிலின் இருபுறச்சாலையிலும் பல கி.மீ. தொலைவுக்கு காத்திருந்து குதிரை சிலைக்கு 2,500க்கும் மேற்பட்ட மாலைகள் அணிவித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இந்நிலையில் அருகே உள்ள பெரிய குளத்தில் தெப்பம் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிகள் அலங்காரத்துடன் அமர வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் தெப்பம் இழுக்கப்பட்டது. பின்னர் உற்சவ ரத்தத்திலிருந்து ஆலயத்திற்கு கொண்டு வந்து வைத்தனர்.இதனை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

    • ஜெயங்எகொண்டாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது
    • பெண்கள் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ந்தனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்சர்வதேச மகளிர் தின விழா எம்எல்ஏ கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்களுடன் இணைந்து எம்எல்ஏ கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் விஜயசங்கர், மண்டல அலுவலர் தமிழ்மணி, ஊரக வளர்ச்சி உதவி செயற்ப்பொறியாளர் வஹிதாபானு, ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் பஞ்சாபிகேசன், ஒன்றியக்குழு தலைவர் ரவிசங்கர், துணைத்தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகானந்தம் (வட்டார ஊராட்சி), முருகன் (கிராம ஊராட்சி) மற்றும் அனைத்து ஒன்றிய அரசு அலுவலர்கள் இந்த பெண்கள் தின விழாவில் கலந்து கொண்டனர்.

    ×