search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பில்லிசோறு ஏவுதல் விழா
    X

    பில்லிசோறு ஏவுதல் விழா

    வாராப்பூர்மா மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூரில் பூரணபுஷ்கலா உடனுறை பெரிய அய்யனார், பாலையடி கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது.இந்த கோயிலில் மாசி மக திருவிழா கடந்த 3ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மண்டகப்படி நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மனித ரத்தம் கலந்து சோறு பிசைந்து, பில்லி எறியும் வினோத திருவிழா நடைபெற்றது.பாரம்பரியமாகஉள்ள வழக்கப்படி ஒரு சிறுவன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த வேஷ்டி குகையால் மறைக்கப்பட்ட மறைவில் அமரவைக்கப்பட்டிருந்த நிலையில் பூசாரிகளில் ஒருவர் அந்த சிறுவனின் கழுத்தை அறுப்பதுபோல் செய்துவிட்டு, தனது தொடையை கீறி அதில் இருந்து வந்த ரத்தத்தை அங்கு தயாராக இருந்த சோற்றில் கலந்து பிசைந்து வைத்தார்.பின்னர் சுமார் 20-க்கும் மேற்பட்ட கோயில் பூசாரிகள் இந்த பில்லி சோற்றை எடுத்துக்கொண்டு காட்டு பகுதிக்கு ஓடிச்சென்று வானத்தைநோக்கி 4 திசைகளிலும் வீசினர். இந்த பில்லி எரியும் வினோத நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவினை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் வாராப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அன்னதானமும், நீர் மோர் பந்தலும் அமைக்கப் பட்டிருந்தது. செம்பட்டி விடுதி போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்இன்று கிடாய் வெட்டு பூஜை களும் மற்றும் நாளை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    Next Story
    ×