search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "France prime minister"

    பிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவிட் பிலிப் அறிவித்துள்ளார். #FrenchPM #EdouardPhilippe #fueltax
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கான செலவினங்களுக்காக பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரி விதிக்கப்பட்டது.

    இந்த வரிவிதிப்பினால் ஏற்பட்ட டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.

    இதற்கிடையே, போலீசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.



    இதேபோல், பிரான்ஸ் முழுவதும் சுமார் 1,600 இடங்களில் இந்த போராட்டம் வெடித்தது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுப்பட்டு பொது சொத்துகளை நாசப்படுத்தினர். சில போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு போலீசாரின் தடுப்புகளை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்நிலையில், நடுத்தர மக்களின் சுமையை குறைப்பதற்காக பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவர்ட் பிலிப் இன்று அறிவித்துள்ளார்.

    தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய எடோவர்ட் பிலிப், மக்களின் கோபத்தை பார்க்காமலோ, கேட்காமலோ இருக்க வேண்டுமானால் நாம் குருடாகவோ, செவிடாகவோ இருக்க வேண்டும். இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் தகுதி எத்தகையை வரிவிதிப்புக்கும் இருக்க கூடாது.

    எனவே, மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து வரும் 6 மாதங்களுக்கு எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை அரசு ரத்து செய்துள்ளது என அறிவித்துள்ளார். #FrenchPM #EdouardPhilippe #fueltax #fueltaxincrease #Parisprotests
    ×