search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "four years"

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அக்கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.#4YearsOfModiGovt

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவி ஏற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இதை நாடு முழுவதும் பா.ஜனதாவினர் கொண்டாடி வருகிறார்கள். அனைத்து மாநில தலைநகரங்களிலும் தலைவர்கள் அரசின் சாதனையை மக்களிடம் விளக்கி சொல்லும்படி கட்சி தலைவர் அமித்ஷா கட்டளையிட்டுள்ளார்.

    இதற்கு பதிலடியாக அனைத்து மாநில தலை நகரங்களிலும் பா.ஜனதா அரசின் வேதனையை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டுள்ளார்.

    தலைவர்கள் உத்தரவுப்படி இன்று சென்னையில் பா.ஜனதா அலுவலகத்திலும், காங்கிரஸ் அலுவலகத்திலும் மாநில தலைவர்கள் போட்டி போட்டு சாதனை கருத்துக்களையும், வேதனை கருத்துக்களையும் எடுத்து வைத்தனர்.

    பா.ஜனதா அலுவலகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    இன்று 5-வது ஆண்டில் மோடி அரசு அடியெடுத்து வைக்கிறது. மறுபடியும் 5 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சிக்கு வரும் என்ற முழு நம்பிக்கையோடு எங்கள் பணிகளை தொடர்கிறோம். நாடு முழுவதும் இன்று அனைத்து மாநில தலை நகரங்களிலும் கட்சித் தலைவர் கட்டளைப்படி அரசின் சாதனைகளை மக்கள் முன் வைக்கிறோம்.

    தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா அரசின் சாதனைகளை பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களுக்கு விளக்க உள்ளோம். நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் நான் பேசுகிறேன். மதுரையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.

    இதேபோல் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் சாதனை விளக்க கூட்டம் நடைபெறுகிறது.

    குறிப்பாக 100 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரசார் தீர்க்க முடியாத காவிரி பிரச்சனைக்கு நாங்கள் தீர்வு கண்டுள்ளோம்.

    மக்களுக்கு என்னென்ன செய்வோம் என்று சொன்னோமோ அத்தனையும் செய்துள்ளோம். நாட்டின் பெருமை, பொருளாதாரம் சமூக அந்தஸ்து ஆகியவற்றை உயர்த்தி இருக்கிறோம்.

    காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதி கூட செய்துதர முடியவில்லை என்ற இழி நிலையை நீக்கி இருக்கிறோம். 30 கோடி மக்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கி இருக்கிறார்கள் கோடி ஏழை மக்களுக்கு சிறு தொழில் செய்ய கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 50 மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளன.

    ரூ.6½ லட்சம் கோடி செலவில் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் 5 நகரங்களில் அமைகிறது. வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை என்று சொல்கிறார்கள். 8 கோடி பேர் புதிதாக தொழில் தொடங்கி முதலாளி ஆகி இருக்கிறார்கள். அவர்கள் மூலம் குறைந்த பட்சம் 16 கோடி பேர் தொழில் வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10 லட்சம் கோடியில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சேலம், ஓசூர், வேலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் உதான் திட்டத்தின் கீழ் சிறு விமான தளங்கள் உருவாக உள்ளன. குமரியில் ரூ.28 ஆயிரம் கோடியில் துறைமுகம் அமைகிறது. எத்தைனையோ சாதனைகள் செய்தாலும் திட்டமிட்டு எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அதை மக்கள் முறியடிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதாவின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சின்னா ரெட்டி, மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கூறியதாவது:-

    பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தார். 4 ஆண்டுகளாக மக்கள் துயரம் அனுபவித்து வருகிறார்கள். மக்கள் படும் வேதனைகளை ராகுல் காந்தி உத்தரவுப்படி இன்று மக்கள் முன் வைக்கிறோம். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம். பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், கறுப்பு பணம், ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது, வளர்ச்சியை மட்டுமே பார்க்க முடியும் என்று வாக்குறுதி அளித்தார்.

    ஆனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 18 சதவீத குழந்தைகள் சரிவிகித உணவு கிடைக்காமல் உடல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 பேரில் ஒருவர் பட்டினியால் இருக்கிறார் என்று உலக உணவு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.


    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தி பதுக்கலுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ஊழல் தலை விரித்தாடுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள், சட்டம், மரபுகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன.

    பா.ஜனதா கட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர் மூலம் இரட்டை ஆட்சி முறையை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற மோசமான ஆட்சி நடந்தது இல்லை.

    மோடி அலை ஓய்ந்து விட்டது. ராகுல் அலை வீசுகிறது. மதவாதம், பயங்கரவாதத்தை எதிர்க்கும் சக்திகள் ஒன்றாக சேர்ந்து ராகுலை விரைவில் பிரதமர் ஆக்குவார்கள்.

    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தமிழக முதல்-அமைச்சரோ தூத்துக்குடி சம்பவத்தை பத்திரிகைகள் மூலம் பார்த்ததாக சொல்கிறார். நாட்டு நடப்பு கூட தெரியாத முதல்வர் இருக்கிறார். உடனடியாக அமைச்சர்கள் குழுவை தூத்துக்குடி அனுப்பி வைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார். #4YearsOfModiGovt

    மத்திய பா.ஜ.க. அரசு நான்காண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். #4YearsOfModi #4YearsOfModiGovt
    புதுடெல்லி:

    மத்தியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  இதை பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 4 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.



    பா.ஜ.க. அரசின் நான்காண்டு நிறைவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    ‘பாஜக அரசு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். மக்களின் ஆதரவால்தான் மத்திய அரசு வலிமையாக செயல்பட முடிகிறது. இதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5-வது ஆண்டில் தொடர்ந்து செயல்படும்’ என மோடி கூறியுள்ளார். #4YearsOfModi #4YearsOfModiGovt

    ×