search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake doctor arrested"

    ஊத்தங்கரையில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைதானார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி ரோட்டில் போலி டாக்டர் இருப்பதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவர் கல்லாவி ரோடு பகுதிக்கு சென்று நேற்று திடீரென்று ஆய்வு நடத்தினார்.

    அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பாச்சல் கிராமத்தை சேர்ந்த மணி (58) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. 

    அவரை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அசோக்குமார் பிடித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    ரிஷிவந்தியத்தில் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 32). டி.பார்ம் படித்து முடித்த இவர் தனது வீட்டு முன்பு மருந்துக்கடை நடத்தி வந்தார். மேலும் இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் தனது மருந்து கடையில் உள்ள ஒரு தனிஅறையில் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளிப்பதாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்அடிப்படையில் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சுந்தர்ராஜன், ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்வதி ஆகியோர் கொண்ட குழுவினர் ராமமூர்த்திக்கு சொந்தமான மருந்துக்கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது ராமமூர்த்தி, நோயாளி ஒருவருக்கு அலோபதி சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் ராமமூர்த்தியை ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராமமூர்த்தியை கைது செய்தனர்.

    பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

    சேலத்தில் போலி டாக்டர் பழனிசாமியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாமாங்கம் மெயின் ரோட்டில் உள்ள ரெட்டிப் பெட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (65). இவர் அதே பகுதியில் பழனிசாமி என்ற பெரில் கிளீனிக் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜலகண்டாபுரம், அரசு மருத்துவமனை தலைமை அலுவலகத்தில் உள்ள துணை மருத்துவர் ரேவதிக்கு பழனிசாமி மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர் என்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் நேற்று இரவு சோதனை செய்வதற்காக பழனிசாமி கிளீனிக்குக்கு சென்ற டாக்டர் ரேவதி அவர் போலி டாக்டர் என்பதை கண்டுபிடித்தார். பின்பு இது குறித்து சூரமங்கலம் போலீசுக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழனிசாமி பி.எஸ்.சி படித்து 15 வருடமாக கிளீனிக் நடத்தியது தெரிய வந்தது. மேலும் இவரின் 2 மகன்களான கார்த்திக் பிசியோதெரபி படித்தவர் என்றும், மணிகண்டன் லேப் டெக்னீசியனாக பழைய சூரமங்கலத்தில் கிளீனிக் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் பழனிசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×