search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eye treatment camp"

    • கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
    • அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பல்லடம் : 

    பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் கணபதிபாளையத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

    ஊராட்சி துணைத்தலைவர் முத்துகுமார் முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

    அதில் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • காக்கையனூர் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனைகளை செய்து கொண்டனர்.

    தென்காசி:

    உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு தென்காசி ஊராட்சி ஒன்றியம் சில்லரைபுரவு ஊராட்சிக்கு உட்பட்ட காக்கையனூர் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி நிர்வாகம், தென்காசி ப்ரோ விஷன் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் என்.குமார் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனைகளை செய்து கொண்டனர். 13 நபர்களுக்கு கண் குறைபாடு இருந்ததையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சில்லரைபுரவு ஊராட்சி மன்ற செயலர் செண்பகராஜன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    • மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடி வழங்கினர்
    • டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன நாளையொட்டி வேலூர் லாங்கு பஜாரில் உள்ள சண்முகனடியார் மண்டபத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியுடன் இணைந்து சிஎம்சி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    பெங்களூர் மண்டல மேலாளர் எஸ்.பரணிதரன் மேற்பார்வையில் நடந்த முகாமிற்கு வேலூர் கிளை மேலாளர் புன்னைவாணன் தலைமை தாங்கினார். பெங்களூர் மண்டல துணை மேலாளர் ராம்நாத் விமல் முன்னிலை வகித்தார். சி.எம்.சி கண் மருத்துவமனை டாக்டர் ஹிட்லர் தலைமையில் மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்தனர். இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

    மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கண் கண்ணாடி வழங்க உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.நிகழ்ச்சியில் வேலூர் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்ற ஊழியர்களுக்காக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்கள் என 120 பேருக்கு கண் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற்றது

    நெல்லை:

    நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்ற ஊழியர்களுக்காக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை தாலுகா சட்டப்பணிகள் குழுத்தலைவர் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி கே.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சி.செந்தில்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.குமார், குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஏ.பல்கலை செல்வன், வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் எம்.ராஜேந்திரன், எஸ்.செல்வ ஆண்டனி, கே.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர் காயத்ரி கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். விழி ஒளி ஆய்வாளர் இந்திரா கண் பரிசோதனை மேற்கொண்டார். நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்கள் என 120 பேருக்கு கண் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் முதன்மை முகாம் மாணிக்கம், உதவி மேலாளர் அகிலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருக்கனூர் அருகே உள்ள பொம்பூர் இளங்கோ நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர்.
    • முகாமிற்கு திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவர் தமிழ்மணி, செயலாளர் அசாருதீன், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் லயன்ஸ் சங்கம், புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொம்பூர் ஊராட்சி மன்றம் , ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து திருக்கனூர் அருகே உள்ள பொம்பூர் இளங்கோ நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர்.

    முகாமிற்கு திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவர் தமிழ்மணி, செயலாளர் அசாருதீன், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    பொம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா கஜேந்திரன், கவுன்சிலர் சிவகாமி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.

    இதில் திருக்கனூர் லயன்ஸ் நிர்வாகிகள் பரந்தாமன், சையது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×