search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode-Nellai Train"

    • பாவூர்சத்திரம் ரெயில் நிலைய நடை மேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவிற்கு நீட்டிக்க வேண்டும்.
    • பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் தனியாக முன்பதிவு அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.

    தென்காசி:

    ரெயில்வே ஆய்விற்காக பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் வந்த மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அனந்த்திடம் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாவூர்சத்திரம் ரெயில் நிலைய நடை மேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவிற்கு நீட்டிக்க வேண்டும். நடைமேடை ஒன்றில் கூடுதலாக சிறிய மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும்.

    நடைமேடையில் உள்ள பாவூர்சத்திரம் பெயர் பலகைகள் புதுப்பிக்கப்பட வேண்டும், பாவூர்சத்திரம் ரெயில் நிலைய வாசலில் மரங்கள் அடர்த்தியாக உள்ள பகுதியில் வெளிச்சம் இல்லாத நிலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

    ஈரோடு- நெல்லை ரெயிலை அம்பை ,பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும். நெல்லையில் காலியாக நிற்கும் பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை கொண்டு, பாவூர்சத்திரம் வழியாக நெல்லை-பெங்களூருக்கு இயக்க வேண்டும். பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் தனியாக முன்பதிவு அலுவலரை நியமனம் செய்ய வேண்டும். பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தின் வடபகுதியில் அமைந்துள்ள காலியிடங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையிலும், குழந்தைகள் விளையாடும் வகையில் பூங்காக்கள் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டிய ராஜா, ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன் மற்றும் பாவூர்சத்திரம் பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    ×