search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Economists dismissed"

    பாகிஸ்தான் நாட்டு பொருளாதார நிபுணர்கள் இருவர் அரசின் வற்புறுத்தலால் ராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு முன்னாள் மனைவி ஜெமீமா கண்டனம் தெரிவித்துள்ளார். #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முதல் மனைவி ஜெமீமா கோல்டுஸ்மித். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கோடீசுவரரின் மகள். இவர் இம்ரான்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இவர்களின் திருமண வாழ்க்கை முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

    இம்ரான்கான் பிரதமரானதும் அவருக்கு ஜெமீமா முதல் நபராக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது இம்ரான்கானை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

    பாகிஸ்தான் அரசில் பதவிவகித்த பொருளாதார நிபுணர்கள் டாக்டர் ஆசிம் இஜாஷ் கவாஜா, டாக்டர் இம்ரான் ரசூல் ஆகியோர் சமீபத்தில் அரசின் வற்புறுத்தலின்படி ராஜினாமா செய்தனர். முஸ்லிம்களில் அகமதியா பிரிவை சேர்ந்த அதிகாரிகளின் செல்வாக்கை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்காக இம்ரான்கான் மீது அவரது முன்னாள் மனைவி ஜெமீமா கடுமையாக கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

    அதில் பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா தனது அமைச்சரவையையில் அகமதியா பிரிவைச் சேர்ந்தவரை தான் வெளியுறவு துறை மந்திரியாக வைத்திருந்தார் என தெரிவித்துள்ளார். #Pakistan #ImranKhan
    ×