search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Economies"

    இந்தியா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இனி மானியங்கள் உள்ளிட்ட நிதியுதவிகளை அளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். #Trumptostopsubsidies #IndiaChinagrowingeconomies
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மிகப்பெரிய பொருளாதார சக்தியாக சீனா மாறியதற்கு இந்த அமைப்பின் நடவடிக்கைதான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:-

    நீண்ட காலமாக தீமைகளில் இருந்து பல நாடுகளை ராணுவரீதியாக நாம் பாதுகாத்து வருகிறோம். இதற்காக நாம் உலகம் முழுவதும் என்ன நடக்கிறது? என்று கண்காணித்தும் வருகிறோம். அவர்கள் நல்ல எதிர்காலத்தை அமைத்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ராணுவ செலவினங்கள் மிகவும் குறைவு.



    ஆனால், உலகிலேயே ராணுவத்துக்கு அதிகமாக செலவிடுபவர்களாக நாம் இருக்கிறோம். இதில் பெரும்பகுதி வெளிநாடுகளை பாதுகாப்பதற்காக செலவாகிறது, அவர்களில் சிலருக்கு நம்மை பிடிக்கவில்லை என்றாலும் நாம் செலவு செய்து வருகிறோம்.

    அந்த நாடுகள் நம்மை மதிக்க வேண்டும். ஆனால், அவர்கள் மதிப்பதில்லை. எனவே, நாம் அவர்களுக்காக ராணுவத்துக்கு செலவிடும் தொகையை அவர்கள் தர வேண்டும். இப்போது இல்லையென்றாலும் அவர்கள் வசதியாக வந்த பின்னர் நமக்கானதை அவர்கள் தர வேண்டும்.

    சில நாடுகளை நாம் வளரும் பொருளாதாரமாக பார்க்கிறோம். சில நாடுகள் இன்னும் பொருளாதார ரீதியாக முதிர்ச்சி அடையாமல் இருப்பதையும் பார்க்கிறோம், அதனால் அவர்களுக்கு மானியங்களை அளித்து வருகிறோம். இது எல்லாமே கேலிக்கூத்தானது. இந்தியாவாகட்டும், சீனாவாகட்டும் அவர்கள் வளர்ந்து வருவதாக நாம் சொல்கிறோம்.

    தங்களை வளர்ந்த நாடுகளாக  அழைத்து கொள்வதற்காகவே அவர்கள் நம்மிடமிருந்து மானியங்களை பெறுகிறார்கள். நாமும் பணம் கொடுத்து வருகிறோம். இவை அனைத்துமே வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நாம் இதை எல்லாம் நிறுத்தப் போகிறோம். நாம் நிறுத்தியும் விட்டோம்.

    நாமும் வளரும் நாடுதானே? ஆம், நாமும் வளர்ந்து வருகிறோம். என்னைப்பொருத்தவரை நாமும் வளரும் நாடு என்பதால் இந்த மானியங்களை எல்லாம் நிறுத்திவிட்டு இனி மற்ற நாடுகளைவிட நாம் வேகமாக வளரப்போகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #Trumptostopsubsidies #IndiaChinagrowingeconomies 
    ×