search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Easter Holiday"

    • மணப்பாடு கடற்கரையில் மூன்று பக்கமும் கடல்சூழ்ந்து, நடுமையப்பகுதியில் இயற்கையாக உருவான சுமார் 60 அடி உயரத்தில் உள்ள அதிசய மணல் குன்று உள்ளது.
    • நேற்று ஈஸ்டர் விடுமுறை என்பதால் மாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் போன்ற பல்வேறு வாகனத்தில் கடற்கரைக்கு வருகை தந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மணப்பாடு கடற்கரை பகுதி தென் மாவட்டத்தில் வித்தியாச மான முறையில் அமைந்துள்ள கடற்கரை ஆகும்.

    இந்த கடற்கரையில் மூன்று பக்கமும் கடல்சூழ்ந்து நடுமையப் பகுதியில் இயற்கையாக உருவான சுமார் 60 அடி உயரத்தில் உள்ளஅதிசய மணல் குன்று உள்ளது.

    இந்த மணல் குன்றின்மீது திருச்சிலுவை நாதர் ஆலயம், ஆலயத்திற்கு பின்புறம் புனித சவேரியார் இங்கு வந்து தங்கியிருந்து தமிழ் படித்த குகை, அவர் குடிப்பதற்காக தண்ணீர் எடுத்த நாழிக்கிணறு, இவரது பெயரில் தியான மண்டபம் ஆகியன இன்றும் புதுப்பித்து வைத்து, பார்வை யாளர்கள் பார்த்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருச்சிலுவை நாதர் ஆலயத்திற்கு பின்புறம், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கடல் வழி பயணிகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம், அதனையொட்டி கடல் வழியாக ஊடுருவலை தடுக்க உயரமான கண்காணிப்பு காமிரா ஆகியன உள்ளது.

    நேற்று ஈஸ்டர் விடுமுறை என்பதாலும், ஒரு சில நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும் நேற்று மாலை ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் போன்ற பல்வேறு வாகனத்தில் கடற்கரைக்கு வருகை தந்தனர். இவர்கள்இங்கு உள்ள குகை, நாழிக்கிணறு, தியான மண்டபம் ஆகியவற்றை பார்த்து ரசித்து சென்றனர்.

    ஒரு சிலர் குடும்பத்துடன் கடலில் குளித்து விளை யாடினர்.

    திருச்செந்தூரில் இருந்து குலசேகரன் பட்டினம் உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உடன்குடி சுற்றுப்புற பகுதியில் உள்ளவர்களும் கடற்கரைக்கு வந்திருந்தனர்.

    ×