search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dussara Constume"

    • உடன்குடியில் வேடபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்
    • ஆடிப்பாடி ஆனந்த கூத்தாடி ஆண்டவனை தரிசித்து தங்களது வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி கொள்ளும் இடம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகும்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி தமிழகத்தில் பல பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து கடலில் நீராடி மாலை அணிந்து 61 நாள், 41 நாள், 21 நாள், 11 மற்றும் 5 நாட்கள் என கணக்கிட்டு விரதம் தொடங்கி வருகின்றனர். தசராவை யொட்டி ஏராளமான தொழி லாளர்கள் வேடப்பொ ருட்களை விதவிதமாக செய்வதில் இரவு -பகலாக ஈடுபட்டுள்ளனர்.

    கொடியேற்றத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் விரதமிருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். உடன்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமாகவும் உறுதியாகவும் இருக்கும் என்பதால் உடன்குடியில் பொருட்கள் வாங்க அதிக ஆர்வமாக உள்ளனர். இதனால் உடன்குடியில் வேடபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இது தொடர்பாக வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆடிப்பாடி ஆனந்த கூத்தாடி ஆண்டவனை தரிசித்து தங்களது வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி கொள்ளும் இடம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகும். மனிதன் எந்த சூழ்நிலையிலும் தான் என்று ஆணவத்தை குறைத்து, கையேந்தி தர்மம் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது மேலும் ஒரு சிறப்பாகும் என்று கூறினார்.

    ×