search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug Awareness"

    • குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு, சைபர் கிரைம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தர வின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் அறிவுறுத்தலில் நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பொருள் தடுப்பு, சைபர் கிரைம் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போலீசார் என பலர் கலந்து கொண்டனர்.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் தெரிவித்த 3 மாணவ மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் ரொக்க பரிசு வழங்கினார்.

    • காரைக்குடியில் நடந்த போதைபொருள் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போதை ஒழியட்டும் பாதை மிளிரட்டும் என போதை பொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் அழகப்பா பல்கலைக்கழக பவ நகர் மைதானத்தில் இன்று காலை நடந்தது.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கினார்.சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன் மினி மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பவநகர் ஸ்டேடியத்தில் இருந்து ஆரியவன், செக்காலை பேக்கரி, பெரியார் சிலை வழியாக கண்ணதாசன் மணிமண்டபத்தில் முடி வடைந்தது. கலந்து கொண்ட வர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன், நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வழங்கி னர்.

    இதில் சார் ஆட்சியர் பிரபாகரன், முன்னாள் அமைச்சர் தென்னவன், சாக்கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன், பேரூராட்சி சேர்மன்கள் ராதிகா, சங்கீதா, கார்த்திக்சோலை, அழ கப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புகுழு உறுப்பினர்கள் சுவாமி நாதன், கருப்புச்சாமி, மாவட்ட இளைஞரணி அமை ப்பாளர் செந்தில்குமார், நகர்மன்ற ஆணை யாளர் லட்சுமணன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஓடினர்.காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

    • பி.எஸ்.ஆர்.கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்தும் நடத்தப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி தாலாளர் சோலை சாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி-அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரங்கராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் டீன் மாரிச்சாமி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதற்காக ஏற்பாடுகளை பேராசிரியர் துர்கை ஈஸ்வரன் செய்திருந்தார். பேராசிரியை ராஜலட்சுமி நன்றி கூறினார்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகள் போதைபொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திண்டுக்கல்லில் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மேயர் இளமதி, துைணமேயர் ராஜப்பா உள்பட பலர் பங்கேற்றனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விசாகன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    பழனி நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமையிலும், வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காந்திராஜன் எம்.எல்.ஏ தலைமையிலும், நத்தம் துரைகமலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நத்தம் பேரூராட்சி தலைவர் தலைமையிலும், என்.பி.ஆர் கல்லூரியில் நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தலைமையிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    நிலக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் தலைமையிலும், மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தலைமையிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மாணவ-மாணவிகள் போதைபொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கு வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை சார்பில் சாராயம் மற்றும் போதைப்பொருட் கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி பஸ் நிலை யம் , கோர்ட்டு , அரசு மருத்துவமனை வழியாகசென்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் நிறைவடைந்தது .

    இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உதவி ஆணை யர் பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×