என் மலர்

  நீங்கள் தேடியது "dacoity"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில் கொடை விழாவுக்கு சென்ற போது கொள்ளை நடந்துள்ளது.
  • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

  ஆலங்குளம்:

  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன் பென்ஸ்கர்(வயது 36). இவர் ராம்நகர் அருகே உள்ள தீர்த்தாரப்பபுரத்தில் கல்குவாரியில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

  நேற்று ராம்நகர் அருகே உள்ள நாலாங்குறிச்சியில் தனது மாமனார் வீட்டு கோவில் கொடை விழாவுக்கு பென்ஸ்கர் சென்றார். இதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் அவர் சென்றுவிட்டார்.விழா முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான டிவி, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு லேப்டாப் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த பென்ஸ்கர் ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


  ×