என் மலர்

  நீங்கள் தேடியது "d-block"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் அருள்நிதியின் 15-வது படமான டி-பிளாக் திரைப்படத்தின் புதிய அறிவிப்பு.
  • இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது வலைத்தளப் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

  'வம்சம்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து 'மௌனகுரு', 'டிமாண்டி காலனி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'பிருந்தாவனம்', 'கே-13' என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

  அதன்பின் நடிகர் அருள்நிதி அவருடைய 15-வது படத்தை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கினார். டி-பிளாக் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வெளியிட உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

  டி-பிளாக்


  இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "ஐஸ் கட்டி குருவி" என்ற வீடியோ பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை (14.06.2022) மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக அருள்நிதி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  ×