search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crowded the shopping streets"

    • பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
    • கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

    கோவை,

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூ ட்டியே புத்தாடைகள் வாங்குவ தற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. பெரு ம்பாலான பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் ஒப்பணக்கார வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் சாலையோரங்களில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு ஜவுளி வாங்க செல்கின்றனர்.

    இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையானை இன்று விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் மேலும் அதிகமாக காணப்பட்டது.போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினர்.

    மேலும் பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை உள்பட முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சாலையின் ஒருபுறம் தடுப்புகள் அமைக்கப்படவுள்ளது.

    கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மீது போலீசார் நின்று பைனாகுலர் மூலம் பொதுமக்கள் கூட்டத்தை காண்கா ணித்து வருகின்றனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சந்தேகப்படும்படியான ஆசாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் போலீசார் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவுறுத்தி வருகின்றனா். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்க ளிடம் ஜேப்படி செய்யும் நபர்களை பிடிப்பதற்காக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் சீருடையின்றி சாதாரண உடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×