search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Control Room"

    • கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரித்து வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யதார்.
    • அணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீலத்தநல்லூர் பாலம் கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால் கும்பகோணம் வட்டம் கொத்தங்குடி ஊராட்சியில் நீலத்தநல்லூர் பாலம் கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரித்து வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    மேலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமா றும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24 X 7) இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது காவிரி வடிநிலகோட்டம் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) இளங்கோ, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர்கள் பூங்கொடி, ராஜ்குமார், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×