search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consultative metting"

    • தென்மேற்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
    • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக்சிரு தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சிற்றாறு வடிநில கோட்டம் மற்றும் மேல வைப்பாறு வடிநில கோட்டம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இ-சேவை மையம் மூலம் வழங்கப்படும் அனைத்து விதமான சான்றிதழ்கள், ஓய்வூதியம் மனுக்கள், பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல் மற்றும் பட்டா மாறுதல் மேல்முறையீடு மனுக்கள் தொடர்பான மனுக்களை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் தென்மேற்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குனர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன், ஆர்.டி.ஓ.க்கள் கெங்கா தேவி (தென்காசி), அஸ்ரத் பேகம் (சங்கரன்கோவில்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஷேக் அப்துல்காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×