search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction workers"

    • கல்குவாரி விபத்தை காரணம் காட்டி குவாரிகள் மூடப்பட்டுள்ளது
    • குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் கட்டுமான பொருட்கள் கிடைக்கவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் அதன் தலைவர் முருகன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் பெரும்பான்மை யான பகுதிகளில் இல்லை. இதனால் பெண்கள் கட்டுமான தொழிலுக்கு வேலைக்கு சென்று வந்தனர்.

    தற்போது கல்குவாரி விபத்தை காரணம் காட்டி குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் கட்டுமான பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் தடைபட்டுள்ளது.

    இதன் காரணமாக பணிக்குச் சென்ற பெண்கள் வேலை இல்லாததால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் வீட்டு வாடகை, படிப்புச் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்படுவதோடு மகளிர் சுய உதவி குழுக்களில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.

    எனவே கல் குவாரிகளை விரைந்து செயல்பட வைத்து கட்டுமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    சிவசேனா நெல்லை மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமையில் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ஒரு நபர் தனக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உள்ள அதிகாரிகளைத் தெரியும் என்று கூறி எங்கள் பகுதியில் உள்ள ஏராளமான பெண்களிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.15,000 முதல் ரூ.30 ஆயிரம் வரை வாங்கி விட்டு தற்போது ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    ×