search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction of Canal"

    • கிருஷ்ணராஜபுரம் 8-வது தெருவில் புதிய கால்வாய் வசதி அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதியினர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • இதனையடுத்து புதிய கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வரு கிறார்.

    10-வது வார்டு

    அதன்படி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை அமைச்சர் கீதாஜீவன் கேட்ட போது கிருஷ்ணராஜபுரம் 8-வது தெருவில் புதிய கால்வாய் வசதி, அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனையடுத்து புதிய கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அடிப்படை பணிகள்

    பின்னர் பொதுமக்க ளிடம் அமைச்சர் கூறு கையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரி களிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர தி.மு.க. அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகராட்சி உதவி பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், மற்றும் கருணா, மணி, சந்தனமாரி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×